Please Login to view full dashboard.

தாக்கப் பொறிமுறை

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 02:35am
முதன்மைத் தாக்கங்கள்
  • சில  இரசாயனத் தாக்கங்கள் ஒருபடியில் நிகழக்கூடியவை ஆகும். இங்கு  தாக்கிகளின் பீசமான குணங்கள் அத்தாக்கிகள் சார்பான தாக்க வரிசைக்குச் சமனாகும்.

NO(g) + O3(g) → NO2(g) + O2(g)
R = K [NO(g)] [O3(g)]

பல படித்தாக்கங்கள்
  • பெரும்பாலான இரசாயன தாக்கங்கள் பலபடிகளில் நடைபெறும்.
  • ஒவ்வொரு படியும் முதன்மைத் தாக்கங்கள் என அழைக்கப்படும்.
  • முதன்மைத் தாக்கம் ஒன்றில் தாக்கவீதத்தை நிர்ணயிக்கும்படி அம்முதன்மைத் தாக்கமாகும். ஆனால், பலபடித்தாக்கங்களில்  தாக்க வீதத்தை நிர்ணயிக்கும் படி மெதுவாக நடைபெறும்  படியாகும்.

(உ-ம்)   Cr2O72-(aq) + 2H+(aq) + 4H2O2(aq) → 2CrO5(aq)  [Blue] + 5H2O(l)
2CrO5(aq) + 6H+(aq)  →  2Cr3+(aq) [Green] + 2H2O(l)+ H2O2(aq) +  3O2(g)

சமன்படுத்திய சமன்பாடு
Cr2O72-(aq) + 8H+(aq) + 3H2O2(l) → 2Cr3+(aq) + 7H2O(l) + 3O2(g)

  • இரசாயன தாக்கமொன்றில் யாதேனுமொரு தாக்கி சார்பான தாக்கவரிசை பூச்சியமாக இருப்பின் அது பலபடித்தாக்கமாக இருக்கும். இங்கும் முதன்மைப்படி வேகம் கூடியதாகும்.
  • இரசாயன தாக்கமொன்றில் சகல தாக்கு பொருட்களும் வீதிவிதியில் அடங்குமாயின் தாக்கவீதத்தை துணியும் வழியில் எல்லா தாக்கிகளும் பங்குபற்ற வேண்டும்.
ஊக்கி
  • இரசாயன தாக்கத்தில் பதார்த்தம் ஒன்று தாக்கவீதத்தை அதிகரித்து தாக்க முடிவில் சமனிலையில் கணியம் மாறாது மீளபெறப்படும்.
  • சமதானிகள் பங்குபற்றும் தாக்கங்களில் சிலவேளை திணிவு மாறகூடும். அத்துடன் பௌதீகமாற்றமும் ஏற்படமுடியும்.
  • சமனிலை தாக்கம் ஒன்றின் ஆரம்பத்தில் ஊக்கி சேர்க்கப்படும்போது அது முற்தாக்க வீதத்தையும், பிற்தாக்க வீதத்தையும் ஒரே காரணியால் அதிகரிக்க செய்வதால் சமனிலை விரைவாக கிடைக்கும்.  சமனிலைப் புள்ளியில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. அத்துடன் பெறப்படும் விளைவினளவில் மாற்றம் இருக்காது.
  • ஊக்கி பயன்படுத்தப்படும் போது ஓரலகு நேரத்தில் பெறப்படும் விளைவின் அளவு உயர்வாக இருக்கும்.
  • ஊக்கி இரசாயன மாற்றத்தில் பங்குபற்ற முடியும். இது பொறிமுறையை மாற்றுவதன் மூலம் ஏவற்சக்தியை குறைத்து தாக்கவீதத்தை அதிகரிக்கும்.
  • 08 ஊக்கி தாக்கத்தின் ஏவற்சக்தியை குறைத்தாலும் தாக்கத்தின் வெப்பஉள்ளுறையை மாற்றாது.
  • ஊக்கி பொறிமுறையை மாற்றுவதன் மூலம் தாக்கப்பாதையை மாற்றி ஏவற்சக்தியை குறைப்பதுடன் தாக்கவீதத்தை அதிகரிக்கச் செய்யும்.

A + B →  AB

S1              A + B  ↔  AB

S2             AB + B  →  AB2

09

  • இங்கு ஊக்கி பயன்படுவதால் தாக்கம் 2 படிகளில் நடைபெறும்.
  • இங்கு இரண்டாவது தாக்கப்படி மெதுவானது.
  • ஊக்கி உள்ள போது தாக்கத்தின் ஏவற்சக்தி  Ea1 ஆகும். ஏவற்சக்தி  Ea2  உயர்வானதாகும்.

 

மாறுநிலை கட்டம் 

  • இங்கு ஊக்கி பயன்படுத்துவதால் தாக்கம் இருபடிகளில் நிகழும்.
  • இடைநிலை சேர்வையும், இடைநிலை சிக்கலும் ஒன்றல்ல.
  • விளைவுகள் தோன்றும் வகையில் தாக்கம் நடைபெறும் போது அழுத்தசக்தி உச்சத்திலிருக்கும் சந்தர்ப்பத்தில் தாக்கிகளினதும் அணுக்களினதும் பிணைப்பு அமைவு ஏவற்படுத்தப்பட்ட சிக்கல் எனப்படும்.
  • இதுவும் உறுதி குறைவான நிலை. இதனை பிரித்தெடுக்க முடியாது. எனவே இது ‘ மாறுநிலை கட்டம் ‘ எனப்படும்.
  • ஊக்கி உள்ளபோது இரண்டாவது படி மெதுவானது ஆகும்.

ஊக்கிகள் பொதுவாக 2 வகைப்படும்

  •  ஏகவின ஊக்கி
  •  பல்லின ஊக்கி

ஏகவின ஊக்கி  

இரசாயன தாக்கமொன்றில் தாக்கிகளும் ஊக்கியும் ஒரே பௌதீக அவத்தையில் காணப்படின் அவ்ஊக்கி ‘ ஏகவின ஊக்கி ‘ ஆகும்.

  • வாயுக்கள் பங்குபற்றும் தாக்கங்களில் வாயுக்கள் ஊக்கியாகப் பயன்படும்

Untitled-2

  • திரவநிலை / நீர்க்கரைசல் நிலையில் இடம்பெறும் தாக்கங்களில் அமிலம் / காரம் ஊக்கியாகச் செயற்படும்.

Untitled-3

  • அயன்பரிமாற்றத் தாக்கங்களில் (தாழ்த்தலேற்ற தாக்கம்) சில தாண்டல் உலோகக் கற்றயன்கள் ஏகவின ஊக்கியாகச் செயற்படும்.

Untitled-4

 

 

பல்லின ஊக்கி 

இரசாயன தாக்கமொன்றில் தாக்கிகளும் ஊக்கியும் வெவ்வேறு பௌதீக  நிலையில் காணப்படின் அவ்ஊக்கி ‘ பல்லின ஊக்கி’ எனப்படும்.

  • வாயுக்கள் பங்குபற்றும் தாக்கங்களில் தாண்டல் உலோகங்கள் /அவற்றின் ஒட்சைட்டுக்கள் பல்லின ஊக்கியாகச் செயற்படும்.

Untitled-5

ஊக்கல் கொள்கைகள்

இது பிரதானமாக 2 வகைப்படும்.

1.   இடைநிலைச்சேர்வைக் கொள்கை
2.   புறத்துறிஞ்சற் கொள்கை

இடைநிலைச்சேர்வைக் கொள்கை 

  • இங்கு இடைநிலைச்சேர்வை பெறப்படும். இவ் இடைநிலைச் சேர்வையானது ஊக்கியை வெளியேற்றி விளைவைக் கொடுக்கும்.

Untitled-6           இங்கு  இடைநிலை – V2O5(s)

புறத்துறிஞ்சற் கொள்கை 

  • தாண்டல் உலோகங்களில் வெற்று Orbital காணப்படுவதால், இவை வாயுக்களை புறத்துறிஞ்சக் கூடியவை.
  • இதனால் பிணைப்புக்கள் உடைந்து மூலிகங்கள் உருவாகும். அவை அந்த தாண்டல் உலோக மேற்பரப்பில் சுயாதீனமாக காணப்படும்.
  • பின் அம்மூலிகம் உடைந்து விளைவு வெளியேறும்.

Untitled-7

உயிர் இரசாயன ஊக்கி – நொதியம் 

  • நொதியங்கள் பெரிய கோளவடிவ புரத மூலக்கூறாகும்.
  • இங்கு நொதியங்கள் தற்சிறப்பான பகுதிகளைக் கொண்டவை.  அப்பகுதியுடன் ஆதாரப்படை இணைந்து ஆதாரப்படைச் சிக்கல் உருவாகும்.
  • வெப்பநிலையை அதிகரிக்கும் போது பிணைப்புகள் உடைவதால் நொதியத்தின் உயிர்ப்புத்தானம் விகாரடையும்.
  • இதனால் ஆதாரப்படை நொதியத்துடன் இணையமுடியாமல் போகும்.
  • இதேபோல் ஆதாரப்படையின் செறிவு அதிகரிக்கும்போது முதலில் தாக்கவீதம் அதிகரித்துச் சென்று பின் ஏவற்படுத்தப்பட்ட இடங்கள் ஆதாரப்படையால் முற்றாக நிரப்பப்படுவதால் தாக்கவீதம் அதிகரிக்காது.
  • அத்துடன் உயிர் இரசாயன ஊக்கிகள் சிறப்பான நிபந்தனைகளில் தொழிற்படும். அவை pH பெறுமானத்திற்கு உணர்திறன் உடையது.

சுய ஊக்கி 

  • இரசாயன தாக்கங்களில் பெறப்படும் விளைவுகளும் சில சமயங்களில்  ஊக்கியாகத் தொழிற்படக் கூடியது. இவ்வாறான ஊக்கி ‘ சுய ஊக்கி ‘ எனப்படும்.

(உ – ம்)  C2O42-(s) + 2MnO4(aq) + 16H+(aq)  →  2Mn2+(aq) + 10CO2(g) +  8H2O(l)

  • K2CrO4 இற்கு அமில ஊடகத்தில் KMnO4 சேர்க்கும் போது விளைவாக பெறப்படும் Mn2+ ஒரு சுய ஊக்கியாகத் தொழிற்படும்.

ஊக்கல் நச்சூட்டல் 

  • இரசாயனத் தாக்கங்களில் சில பதார்த்தங்களால் ஊக்கியின் செயற்திறன் குறைவடையும் / செயற்திறன் முற்றாக இல்லாது போகும். இது ‘ ஊக்கல் நச்சூட்டல் ‘ எனப்படும்.

ஊக்கல்  நிலைமாற்றிகள் 

  • வாகன எரிபொருள் தகனத்தின் போது வெளியாகும் வளியில் CO(g) , NO(g), NO2(g) போன்றவையும் எரியாத ஐதரோகாபனும் வெளியேறும்.
  • இவை சூழல் மாசுறுத்திகளாகும்.
  • இதனை தவிர்க்கும் பொருட்டு வாகன  புகைபோக்கியின் உள்ளே ஊக்கல் நிலைமாற்றிகள் பொருத்தப்படும்.
  • இதற்கான முதலாவது அறையில் Pt – Rh வலை காணப்படும். இது NO(g),  NO2(g) வாயுக்களை N2(g) வாயுவாக தாழ்த்தும்.
  • மிகுதி வாயுக்கள் இரண்டாம் அறையினுள் செல்லும்போது CuO / Cu2O3 காணப்படும். அது  CO(g) ஐ   CO2(g)  ஆகவும் ஐதரோகாபனை   CO2(g),  H2O(g) ஆகவும் ஒட்சியேற்றும்.
RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(1)
Jude Sajith
Jude Sajith commented at 10:43 am on 17/11/2017
வாயுக்கள் எவ்வாறு orbital இனால் புறத்துறிஞ்ச படுகின்றன.? செயற்பாடெய் விளக்கவும்....
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank