ஓரின , பல்லின அணுச்சாலகங்கள் அணுக்கள் ஒன்றோடொன்று பங்கீட்டு வலுப்பிணைப்பினால் இணைக்கப்படும்போது தோன்றுகின்றன.
சிலிக்காவின் சாலக அமைப்பு
பல்லின அணுக்கள் மூலம் உருவாகும் சிலிக்கனீரொட்சைட்டு பல்லின அணுச்சாலகத்திற்கான உதாரணமாகும்.
ஓரின , பல்லின அணுச்சாலகங்களையுடைய பதார்த்தங்கள் உயர்வன்மை , உயர் உருகுநிலைகள் / கொதிநிலைகள் உடையன. ஏனெனில் இவை வலிமையான பங்கீட்டுவலுப்பிணைப்புகளினால் உருவாகின்றன.
அணுச்சாலகங்களில் உள்ள பங்கீட்டுவலுப் பிணைப்புகள் மிகவும் வலிமையானதால் அவற்றிற்கு கரைசலினுள் செல்லும் போக்கு இல்லை.
அணுச்சாலகங்களில் அசையத்தகு இலத்திரன்கள் இல்லாததால் மின்னைக் கடத்துவது இல்லை. (விதிவிலக்கு காரியம்)
முனைவாக்கமற்ற மூலக்கூறுகள் ஒன்றுடனொன்று தூண்டிய இருமுனைவுகளுக்கிடையிலான கவர்ச்சி விசைகளினால் இணைவதினால் முனைவில் மூலக்கூற்று சாலகங்கள் உருவாகின்றன.
முனைவில் மூலக்கூற்று சாலகங்களையுடைய பதார்த்தங்களில் ,மூலக்கூறுகள் ஒன்றோடொன்று வலிமை குறைந்த வந்தர்வாலிசு விசைகளினால் இணைக்கப்படுவதினால் ஏனைய வகை சாலக பதார்த்தங்களுடன் ஒப்பிடும் போது தாழ்வான கடினத்தன்மை , தாழ்ந்த உருகுநிலைகள் / கொதிநிலைகள் உடையன.
முனைவில் மூலக்கூற்று சாலக பதார்த்தங்கள் முனைவாக்கமற்ற கரைப்பான்களில் கரையும். காரணம் அவை முனைவாக்கமற்ற மூலக்கூறுகளையுடையன. இவை மின்னைக் கடத்துவது இல்லை. காரணம் இவற்றில் அசையத்தகு இலத்திரன்கள் இல்லை.
முனைவு மூலக்கூற்றுச் சாலகம்
பனிக்கட்டி பளிங்குகள் முனைவு மூலக்கூற்று சாலகமொன்றுக்கான சிறந்த
உதாரணமாகும்.
நிலையான இருமுனைவுகளுக்கிடையிலான கவர்ச்சி விசைகளினால் முனைவாக்கமுடைய மூலக்கூறுகள் இணைவதினால் முனைவு மூலக்கூற்றுச்சாலகம் உருவாகின்றது.
முனைவு மூலக்கூற்றுச் சாலகங்களை உடைய பதார்த்தங்கள் முனைவாக்கமுடைய கரைப்பான்களில் கரையும் போக்கை கூடிய அளவில் உடையன.ஆனால் அசையத்தகு இலத்திரன்கள் இல்லாதபடியினால் மின்னைக் கடத்துவது இல்லை.
முனைவு மூலக்கூற்று சாலகங்களையுடைய பதார்த்தங்களில் மூலக்கூறுகள் நிலையான இருமுனைவு-நிலையான இருமுனைவு கவர்ச்சி விசைகளினால் (ஐதரசன் பிணைப்புகள்) இணைவதினால் முனைவில் மூலக்கூற்றுச் சாலகபதார்த்தங்களிலும் உயர்ந்த கடினத் தன்மை , உருகுநிலைகள் / கொதிநிலைகள் உடையன.
அயன் சாலகங்கள்
சோடியம் அயன்களையும் குளோரைட்டு அயன்களையும் உடைய சோடியம் குளோரைட்டு அயன் சாலகத்திற்கு ஒரு உதாரணமாகும்.
நேரேற்றமுடைய , மறையேற்றமுடைய அயன்களுக்கிடையே உருவாகும் வலிமையான நிலைமின் கவர்ச்சி விசைகளினால் அயன்கள் இணைக்கப்படுவதினால் அயன் சாலகங்கள் உருவாகின்றன.
அயன் சாலகங்களையுடைய பதார்த்தங்களில் வலிமையான நிலைமின் கவர்ச்சிகள் காணப்படுவதினால் உயர் வன்மை , உயர் உருகுநிலைகள் / கொதிநிலைகள் உடையன. அயன் சாலகங்கள் முனைவுக் கரைப்பான்களில் கரையும் தன்மை கூடியவை.
அயன் சாலகங்களை உடைய பதார்த்தங்களில் திண்ம நிலையில் அசையத்தகு இலத்திரன்கள் / அயன்கள் இல்லாதபடியினால் மின்னைக் கடத்துவது இல்லை.
அயன் சாலகங்களையுடைய பதார்த்தங்கள் திரவநிலையில் அல்லது கரைசல் நிலையில் அசையத்தகு அயன்களைக் கொண்டிருப்பதனால் மின்னைக் கடத்தும்.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்