Please Login to view full dashboard.

சமநிலை எண்ணக்கரு

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 08:10am

மீளாத தாக்கம் 

  • குறித்த நிபந்தனையில் தாக்கம் ஒன்று நடைபெற்று பெறப்படும் விளைவு அதே நிபந்தனையில் மீண்டும் ஆரம்ப தாக்குப்பொருளை கொடுக்காவிடின் அத்தாக்கம் ” மீளாத தாக்கம் ” எனப்படும்.
  • மீளாத தாக்கம் ஒன்றில் ஏதாவதொரு தாக்கி முற்றுப்பெற்றதும் தாக்கம் முடிவடைந்துவிடும்.

மீளும் தாக்கம் 

  • குறித்தவொரு நிபந்தனையில் தாக்கம் ஒன்று நிகழ்ந்து பெறப்படும் விளைவுகள் அதே நிபந்தனையில் மீண்டும் ஆரம்ப தாக்குப் பொருட்களை கொடுக்குமாயின் அத்தாக்கம் ” மீளும் தாக்கம் ” எனப்படும்.
  • மீளும் தாக்கம் ஒருபோதும் முற்றுப்பெறாது.

CrO42-(aq) + 2H+(aq)  ↔  Cr2O72-(aq) + H2O(l)

நித்திய நிலையில் உள்ள தொகுதி 

  • தொகுதி ஒன்றில் காணப்படும் கூறு ஒன்று தோன்றும் வீதமும் அக்கூறு விரயமாகும் வீதமும் சமனாக இருக்குமாயின் அது ” நித்திய நிலையில் உள்ள தொகுதி ” ஆகும்.
  • நித்திய நிலையில் ஒருதொகுதி காணப்படுவதற்கு அத்தொகுதி மூடிய / திறந்த தொகுதியாக இருக்க வேண்டும்.
இயக்கச் சமநிலை
  • மூடிய தொகுதி ஒன்றில் மீளும் தகவுள்ள மாற்றமொன்று தொடர்ந்து நிகழ தாக்கிகளின் செறிவுகளும் விளைவுகளினது செறிவுகளும் நேரத்துடன் மாறாது இருப்பின் தொகுதி இயக்க சமநிலையில் இருக்கும்.
  • நிபந்தனைகள் மாறாத போது இயக்கச் சமநிலை தொடரும்.
  • மீளும் தகவுள்ள தாக்கமொன்று மூடியதொகுதியில் இடம்பெறும் போது முதலில் முற்தாக்கவீதம் உயர்வாகக் காணப்படும்.  நேரத்துடன் இது குறைவடைந்து செல்லும்.
  • பிற்தாக்கவீதம் ஆரம்பத்தில் குறைவாகக் காணப்படும். நேரத்துடன் இது அதிகரித்துச் செல்லும்.
  • ஒரு நிலையில் இரு வீதங்களும் சமனாகும். இது ” இயக்கச் சமநிலை ” எனப்படும். பௌதிக நிபந்தனைகள் மாறாத போது இச்சமநிலை தொடரும்.

10

இயக்கச்  சமநிலையின் வகைகள்  

மூடிய தொகுதி ஒன்றில் ஏற்படும் இயக்கச் சமனிலை 4 வகைப்படும்.

இரசாயனச் சமநிலை   

  • மீளும் தகவுள்ள இரசாயன மாற்றமொன்றில் நிகழும் சமநிலை  இரசாயனச் சமநிலை எனப்படும்.

உதாரணம் :  2NO2(g)  ↔  N2O4(g)

CaCO3(s)  ↔  CaO(s)  +  CO2(g)

 மின்வாய்ச்சமநிலை

  • உலோகக் கோல் ஒன்றை அதன் கற்றயன் கரைசலினுள் அமிழ்த்தி வைக்கும் போது இரு வெவ்வேறு தாக்கங்கள் இடம்பெறும்.
  • கோலுக்கும் கரைசலுக்கும் இடையில் அழுத்தவித்தியாசம் ஒன்று உருவாகும்.  இது  மின்வாய்ச்சமநிலை எனப்படும்.

அவத்தைச் சமநிலை  

  • வெவ்வேறு அவத்தைகளில் இடம்பெறும் சமநிலை அவத்தைச் சமநிலை எனப்படும்.

உதாரணம் :   H2O(l)  ↔  H2O(g)

அயன்சமனிலை 

  • அயன்கள் பங்குபற்றும் மீளும் தகவுள்ள இரசாயன மாற்றத்தில் இடம்பெறும் இயக்க சமனிலை அயன் சமனிலை எனப்படும்.

உதாரணம் :   Mg(OH)2(g)  ↔   Mg2+(aq)  + 2OH(aq)

 

சமநிலை விதி
  • பெரும்பார்வைக்குரிய பண்புகள்
    ஒரு தொகுதி ஒன்றை முழுமையாக நோக்குமிடத்து பரிசோதனை ரீதியாக தீர்மானிக்கக் கூடிய இயல்புகள் ஆகும்.
  • மாறா வெப்பநிலையில் மூடிய தொகுதியில் நிகழும் பின்வரும் பொதுத் தாக்கத்தைக் கருதுக.
    அதற்கமைய A,B தாக்கிகள்; C,D விளைவுகள்; a,b,c,d ஆகியன முறையே அவற்றின் பீசமானக் குணகங்கள் ஆகும்.
  • aA + bB →  cC + dD  எனும்  தாக்கமொன்றிற்கு சமநிலை விதியின்படி,                                                                                                     Screenshot (327)
  • K என்பது சமநிலை மாறிலியாகும். [ ] யினால் பதார்த்தங்களின் சமநிலைச் செறிவு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது.
  • K வெப்பநிலையில் மட்டும் தங்கியிருக்கும். இது தாக்கிகளினதும் விளைவுகளினதும் ஆரம்ப, இறுதி செறிவுகளில் தங்கி இருப்பதில்லை. சமநிலை மாறிலியை குறிப்பிடும் போது பின்வரும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
  • தாக்கிகளினதும் விளைவுகளினதும் பௌதிக நிலை குறிப்பிடப்பட வேண்டும்.
  • பின்வருவனவற்றிலும் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
    • சமநிலைத் தாக்கத்திற்குப் பொருத்தமான சமன்செய்த சமன்பாடு வழங்கப்பட வேண்டும். (இது பொதுவாக பீசமான பெறுமானத்திற்கு மிகக்குறைவான முழு எண் கிடைக்கும் வகையில் எழுதப்படும்)
    • குறித்த வெப்பநிலை குறிப்பிடப்பட வேண்டும்.
    • தாக்கிகளினதும் விளைவுகளினதும் பௌதீக நிலைகள் குறிப்பிடப்பட வேண்டும்.
    • சமநிலைமாறிலியானது, தாக்க வீதம் சம்பந்தமான எந்தவித தகவலையும் தராது.
    • K இன் பெறுமானம் ஆரம்ப செறிவுகளில் தங்கியிராது.
    • K ஆனது வெப்பநிலையுடன் மாறுபடும்.
    • வழமையாக தாக்கிகள் சமன்பாட்டில் கீழ் பகுதியில் எழுதப்படும்.
    • திண்மத்தின் அல்லது தூய பதார்த்தத்தின் செறிவு மாறிலியாக இருப்பதனால் அவை சமநிலை மாறிலியினுள் அடக்கப்படும்.
    • சமநிலை மாறிலியின் அலகுகள், K க்கான கோவையில் தங்கியிருக்கும். (எனினும் வெப்பவியக்கவியலின்படி சமநிலை மாறிலியானது பரிமாணமற்ற ஒரு கணியமாகக் கருதப்படும்.)
சமநிலை மாறிலி

மூலர்செறிவுடன் தொடர்புடைய சமநிலை மாறிலி ( Kc)

  • செறிவு மூலம் காட்டப்படும் சமநிலை மாறிலி  Kc  என அறியப்படும்.  (c செறிவைக் குறிக்கும்.)
  •  Kc இற்கான அலகு, எழுதப்படும் சமன்பாட்டின் பீசமானக் குணகத்தில் தங்கியிருக்கும்.
    உதாரணம் : Screenshot (328) Screenshot (330)

 

பகுதியமுக்கங்கள் தொடர்ப்பான சமனிலை மாறிலி (Kp)

  • சமநிலையில் உள்ள வாயுக்கலவையின் வாயுக்கள் இலட்சிய நடத்தை உடையதாயின்;

Screenshot (333)

  • எனவே மாறா வெப்பநிலையில் வாயுவின் செறிவு அதன் அமுக்கத்திற்கு நேர்விகிதசமன் ஆகும்.
  • வாயுவொன்றின் பகுதியமுக்கம் = மொத்த அமுக்கம் × வாயுவின் மூல் பின்னம்
  • PG = PT × XG                                                                                                                    
  • ஆகவே பகுதியமுக்கமானது வாயுவொன்றின் மூல் அளவுக்கு விகிதசமமானது. அதனை கலவையொன்றில் அடங்கியுள்ள வாயுவொன்றினது செறிவின் ஓர் அளவீடாகக் கொள்ளலாம்.
  • உதாரணமாக:
    நைதரசனுக்கும், ஐதரசனுக்கும் இடையிலான சேர்மானம் மூலம்  அமோனியா தயாரிக்கும் தாக்கத்தைக் கருதுவோம்.  N2(g)  +  3H2(g) → 2NH3(g)
  • N2, H2, NH3வாயுக்களின் பகுதியமுக்கங்கள் முறையே PN2, PH2, PNH3 எனின் பகுதியமுக்கம் சார்பான சமநிலை மாறிலி  Kp

Untitled-8

  •  அதற்கமைய  Kp யின் அலகுகள் (அமுக்க அலகுகள்)-2 ஆகும். அமுக்கத்தை Pa (SI அலகுகளில்) அல்லது bar இல் குறிப்பிடலாம்.
    ( 1bar = 105 Pa)
  • வாயுக்களின் பகுதி அமுக்கம் அவற்றின் செறிவுகளாகக் கருதிச் செய்யப்படுகின்றமையால், அவை சமன்பாட்டினால் காட்டப்படும் குறித்த பீசமானக் குணகத்தின் அடுக்குக் குறிக்கு ஏற்றப்படும்.
  • Kp சமனிலைப் புள்ளி (தானம்), சமனிலையில் காணப்படும் வாயுக்களின் செறிவு ஆகியவற்றை விவரிக்கும் ஒரு சுட்டியாகும்.
  • மூடிய தொகுதியில் மீளும் வெப்பப்பிரிகை, ஒரு சமநிலைக் கலவையைத் தருகின்றது. மூடிய தொகுதியொன்றினுள் இருநைதரசன் நாலொட்சைட்டு வாயுவுக்கு வெப்பமேற்று
    வதனால் பின்வரும் ஏகவினச் சமநிலை தோன்றும்.
  • N2O4(g)  →  2NO2(g)                                                                                           Untitled-9                                                                                    

 

 

பல்லினச் சமநிலை
  • அமோனியம் குளோரைட்டை போதுமான அளவு வெப்பநிலைக்கு வெப்பமேற்றும் போது அமோனியா வாயுவாகவும் ஐதரசன் குளோரைட்டு வாயுவாகவும் பிரிகையடையும். மூடிய பாத்திரமொன்றினுள் தாக்கம் சமநிலையடையும்.
  • NH4Cl(aq) →  NH3(g) + HCl(g)
  • தூய திண்மமொன்றின் செறிவானது அதன் மூல் அளவை அதன் கனவளவினால் வகுப்பதால் கிடைக்கும். தூய திண்மமொன்றின் அடர்த்தி மாறிலியாகையால், அதன் செறிவு மாறிலியாகும்.
  • எனவே, மாறா வெப்பநிலையில் அமோனியம் குளோரைட்டைப் போன்றே வேறு திண்மப் பதார்த்தங்களிலும் சமநிலைச் செறிவும் மாறிலியாகும். அதனை சமநிலை மாறிலிக்கான கோவையில் உள்ளடக்கத் தேவையில்லை.

 

Untitled 10

Kp , Kc இற்கிடையிலான தொடர்பு

 

Untitled - 11

  •  Δn = விளைவு வாயுக்கூறுகளின் பீசமானங்களின் கூட்டுத்தொகை – தாக்கி வாயுக்கூறுகளின் பீசமானங்களின் கூட்டுத்தொகை.
கூட்டற்பிரிகையின் அளவு
  • இயக்கச் சமனிலையொன்றில் 1 mol தாக்கியில் இருந்து சமனிலையில் பிரிந்து செல்லும் அளவு கூட்டற்பிரிகையின் அளவு ஆகும்.
  • α  இற்கு அலகு இல்லை.                                                                                                 PCl5(g)  ↔   PCl3(g)  +  Cl2(g)
 ஆரம்பம்  1  0  0
 சமநிலையில்  1 – α  α  α
 n( 1 – α )  nα  nα
 மொத்தகளவளவு V என்க  n/V( 1 – α )   nα/V nα/V
 c( 1 – α )  cα  cα

Untitled-2

இலெச்சற்றிலியின் தத்துவம்

மூடியதொகுதி ஒன்றில் உள்ள இயக்கச் சமநிலையில் உள்ள தொகுதி ஒன்றிக்கு சமநிலையைப் பாதிக்கக் கூடிய பௌதீக காரணி ஒன்றை பிரயோக்கும் போது இயலுமானவரை பழைய நிலையை அடையும் பொருட்டு சமநிலைக் கூறுகளின் அமைப்புக்களை மாற்றியமைப்பதன் மூலம் புதிய சமனிலை ஒன்று உருவாகும்.

இலெச்சற்றிலியின் தத்துவத்தை வாய்ப்புப் பார்த்தல்

செறிவு                                                                                                                            Fe3+(aq) + SCN(aq) → [Fe(SCN)]2+(aq)

11

  • 5ml FeCl3(aq) உம்  5ml NH4SCN(aq) உம் கொதிகுழாய் ஒன்றினுள் ஒருமிக்கக் கலந்து பின்னர் நீர் சேர்த்து ஐதாக்கல் வேண்டும்.
  • ஒரு சோதனைக் குழாயை கட்டுப்பாட்டு சோதனைக்காக வைத்து கொண்டு ஏனைய சோதனைக் குழாய்களில் குறிப்பிட்டவாறு தாக்கு பொருட்களை இடல் வேண்டும்.
  • இங்கு A, B ஆகிய பரிசோதனைக் குழாய்களில் முறையே Fe3+ உம் SCN உம் இடப்படும்.  இதனால் Fe3+, SCN இன் செறிவு அதிகரிப்பதால் இலெச்சற்றிலியின் தத்துவப்படி செறிவுகளை குறைக்கும் முகமாக  சமநிலையானது வலப்புறம் நகரும். இதனால் தொகுதியில் குருதிச் சிவப்பு நிறம் அதிகரிக்கும்.
  • சோதனைக்குழாய் D யில் NaOH(aq) / Zn(s) இட்டு குலுக்கும் போது Fe3+ அயன்செறிவு குறையும். இதேபோல் சோதனைக்குழாய் A யில் AgNO3 இடும்போது SCN ஆனது AgSCN ஆக வீழ்படிவதால் SCN செறிவு குறைவடையும்.
    எனவே இவற்றின் செறிவு அதிகரிக்கும் பொருட்டு சோதனைக் குழாய்களிலும் சமநிலையானது இடப்புறம் நகரும். இதனால் தொகுதியின் குருதிச் சிவப்புநிறம் குறைவடையும்.

வெப்பநிலை

  • NO2(g) ஐ தயாரித்து  3  கொதிகுழாய்களில் வளியின் மேன்முகப் பெயர்ச்சியில் ஒரேயளவில் சேகரித்து இறப்பர் அடைப்பானால் மூடி  வெவ்வேறு வெப்பநிலைகளில் நீர் கொண்ட முகவையினுள் இடல்.
  • Cu(s) + 4HNO3(aq)  →  2NO2(g) + Cu(NO3)2(aq) + 2H2O(l)
  • 2NO2(g) [Brown]  ↔  N2O4(g) [Colourless]
  • சேகரிக்கப்பட்ட NO2 வாயுவானது  N2O4(g) ஆக சமநிலையில் காணப்படும்.

12

  • தொகுதி A யில் வெப்பநிலை அதிகரிப்பதால் இலெச்சற்றிலியின் தத்துவப்படி வெப்பநிலையை குறைக்கும் பொருட்டு சமநிலையானது இடப்புறம் நகரும். இதனால் செங்கபில நிறம் அதிகரிக்கும்.
  • தொகுதி C யில் வெப்பநிலை குறைவடையும். இதனால் சமநிலை வலப்புறம் நகர்வதால் செங்கபில நிறம் குறையும்.

 

அமுக்கம் 

  • NO2(g) தயாரித்து வாயு உட்புகுத்தியில் சேகரித்து பின்னர் முசலத்தை கீழ்நோக்கி அமுக்கி அமுக்கத்தை அதிகரிக்கச் செய்யும்போது முதலில் மூலக்கூறுகள் நெருக்கமடையும். இதனால் செங்கபில நிறம் அதிகரிக்கும்.
  • இலெச்சற்றிலியின் தத்துவப்படி மூலக்கூறுகள் ஐதாகும் திசையான வலப்புறம் நோக்கி சமநிலை நகர்வதால் செங்கபில நிறம் குறையும்.
    2NO2(g) →  N2O4(g)
  • மறுதலையாக முசலத்தை மேல்நோக்கி இழுத்து அமுக்கத்தை குறைக்கும் போது மூலக்கூறுகள் ஐதாவதால் முதலில் செங்கபில நிறம் குறையும்.
  • பின்னர் இலெச்சற்றிலியின் தத்துவப்படி மூலக்கூறுகள் நெருங்கும் திசையான இடப்புறம் நோக்கி சமநிலை நகர செங்கபில நிறம் அதிகரிக்கும்.
  • சிலசமயம் இருபுறமும் தாக்கம் புரியும் வாயு மூலக்கூறுகளின் எண்ணிக்கை சமனாக இருக்கும்போது அமுக்கம் சமனிலையைப் பாதிக்காது.
  • வாயு மூலக்கூறுகள் பங்குபற்றும் சமநிலைத் தாக்கத்தில் மட்டும் அமுக்கம் சமநிலையை பாதிக்கும்.
  • சமநிலைத் தொகுதியில் மாறா அமுக்கத்தில் தொகுதிக்கு சடத்துவ வாயுவை சேர்க்கும்போது தொகுதியின் கனவளவு அதிகரிக்கும். சமநிலை வாயு மூலக்கூறுகள் ஐதாகும். வாயு மூலக்கூறுகள் நெருங்கும் திசையை நோக்கி நகரும்.
  • மாறா கனவளவில் சமநிலைத் தொகுதிக்கு சடத்துவ வாயுவை சேர்க்கும் போது பகுதி அமுக்கத்தில் மாற்றம் எதுவும் ஏற்படாது.
RATE CONTENT 4, 1
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank