Please Login to view full dashboard.

மின்கலங்கள்

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 09:25am
  • இரு  தனிமின்வாய்கள்  இணைக்கப்பட்ட  அமைப்பு  ஓர்  எளிய  மின்கலம்  ஆகும்.
  • ஓர்  எளிய  மின்கலம்  தொழிற்படும்  தொகுதி  சமநிலை  தொகுதியன்று.

  • நியம மின்வாய் அழுத்தப் பெறுமானம் / தாழ்த்தல் அழுத்தப் பெறுமானம் கூடியது  கதோட்டு ஆகும். நியம மின்வாய் அழுத்தப் பெறுமானம் / தாழ்த்தல் அழுத்தப் பெறுமானம் கூடியது அனோட்டு ஆகும்.
  • எளிய  மின்கலத்தின்  வரிப்படம்  IUPAC  முறையில் வரையப்படுமாயின்  வலது பக்கத்தில் தாழ்த்தல் அழுத்தம்  கூடிய  மின்வாயும்  (கதோட்டு),  இடது  பக்கத்தில்  தாழ்த்தல்   அழுத்தம்  குறைந்த  மின்வாயும் (அனோட்டு)   வரையப்படல்  வேண்டும்.
  • கரைசலின்  ஏற்றச்சமநிலையை  பேணும்  பொருட்டு  உப்புப்பாலம்  பயன்படுத்தப்படும்.
  • உப்புப்பாலத்தை   தாயாரிப்பதற்கு  செறிந்த  KNO3, செறிந்த NaNO3,  செறிந்த NH4NO3,  செறிந்த NaCl  களில் தோய்த்த வடிதாள்கள்   பயன்படுத்தப்படும்.
  • மின்கலம்  தொழிற்படும்  போது   தாழ்த்தல் அழுத்தம்  கூடிய  மின்வாயில் தாழ்த்தல் தாக்கமும்  தாழ்த்தல்   அழுத்தம்  குறைந்த  மின்வாயில்   ஒட்சியேற்றல்  தாக்கமும்  நிகழும்.
    • H2(g) மின்வாய் தாக்கம் :   2H+(aq)  +  2e  →  H2(g)
    • Zn(s)  மின்வாய் தாக்கம் :  Zn(s)  →  Zn2+(aq) + 2e
    • மின்கலத்தாக்கம் :  2H+(aq)  +  Zn(s)  →  H2(g)  +  Zn2+(g)
  • இம்மின்கலம்  தொழிற்படும்  போது  வெளிச்சுற்றில் Zn  மின்வாயிலிருந்து  ஐதரசன் மின்வாயை  நோக்கி  en கள் பாயும்.  எனவே  நியம  ஐதரசன்  மின்வாயுடன்  ஒப்பிடும்  போது   நியம  Zn  மின்வாயில்  en செறிவு  அதிகம்.

உப்புப்பாலத்தின் பிரயோகங்கள் :

  • மின்கலத்தின் மின் நடுநிலையை பேணுதல்.
  • அனோட்டு கதோட்டை இணைப்பதன் மூலம் மின்சுற்றை பூர்த்தி செய்தல்.

கலத்தின் மின்னியக்க  விசை

  • மின்னோட்டம் கலத்தின் ஊடாகப் பாயாத போது இரண்டு மின்வாய்களுக்கிடையிலான அழுத்த வித்தியாசமானது மின்னியக்க விசை என வரையறுக்கப்படும்.
  • மின்னியக்க விசையைப் பாதிக்கும் காரணிகளாவன; வெப்பநிலை, மின்பகுபொருளின் செறிவு, மின்வாயின் தன்மை, மின்பகுபொருளின் தன்மை என்பனவாகும்.
  • இது மின்வாய்களுக்கிடையிலான தூரம், மின்வாய்களின் மேற்பரப்பு என்பவற்றில் தங்கியிருப்பதில்லை.
  • கலத்தின் மின்னியக்கவிசை  எப்போதும்  நேர் பெறுமானமாக  அமைய வேண்டும்.

கிப்ஸின் சுயாதீன சக்திமாற்றம்

RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank