சடப்பொருளின் பிரதான மூன்று நிலைகளான திண்மம், திரவம், வாயு என்பனவாகும். இம்மூன்று நிலைகளிலும் துணிக்கைகளின் ஒழுங்கமைப்பு, இயக்கம் என்பன வேறுபட்டு காணப்படும்.
பௌதீக இயல்புகளுக்கிடையிலான வேறுபாடுகள்
இயல்பு | திண்மம் | திரவம் | வாயு |
வடிவம் | திட்டவட்டமானது | அடங்கும் கொள்கலத்தின் வடிவத்தை கொண்டது. எனினும் கொள்கலத்தின் மொத்த கனவளவிலும் பரந்திருக்காது. | அடங்கு கொள்கலத்தின் மொத்த வடிவத்தை எடுக்கும் |
கனவளவு | திட்டவட்டமானது | திட்டவட்டமானது | அடங்கும் கொள்கலத்தின் முழு கனவளவையும் அடக்கும் |
அடர்த்தி | உயர்வு | உயர்வு (திண்மத்துடன் ஒப்பிடுகையில் குறைவு) | தாழ்வு |
அமுக்கப்படும் தகவு | அமுக்க முடியாது | அமுக்க முடியாது | பெருமளவில் அமுக்க முடியும் |