Please Login to view full dashboard.

இரசாயனத் தாக்க நிகழ்வு

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 06:29am
  • தொகுதியொன்றின் எந்திரப்பி எனப்படுவது தொகுதியின் எழுமாறான தன்மை பற்றிய அளவீடாகும்.
  • எந்திரப்பி ஓர் நிலைத் தொழிற்பாடாகும் (State function). அது தொகுதியின் ஆரம்ப இறுதி சந்தர்ப்பங்களின் மீது தங்கியிருக்கும். மாற்றம் நடைபெறும் படிமுறையில் தங்கியிருப்பதில்லை.
  • எந்திரப்பி ஆனது இரசாயன , பௌதீக மாற்றத்தைப் பாதிக்கும் காரணிகளில் ஒன்றாகும்.
  • தனிமையாக்கிய தொகுதியொன்றில் நடைபெறும் சுயமான மாற்றம் எந்திரப்பி அதிகரிப்புடன் நடைபெறும்.
  • குறித்த ஒரு தொகுதியின் எந்திரப்பி மாற்றம் , நிலைத்தொழிற்பாடாகையால் எந்திரப்பி வித்தியாசம்  இறுதி எந்திரப்பி பெறுமானத்திலிருந்து ஆரம்ப எந்திரப்பி பெறுமானத்தைக் கழிப்பதன் மூலம் துணியப்படலாம்.
    ΔS = Sஇறுதி – Sஆரம்பம்
  • இரசாயன தாக்கம் ஒன்றிற்காக,
    ΔS = Sவிளைவு – Sதாக்கி
  • இவ் வித்தியாசத்தை நியம நிபந்தனைகளின் கீழ் அளக்கப்படும் போது,
    ΔS = Sθவிளைவு – Sθதாக்கி
  • மாற்றமொன்றுடன் தொடர்புடைய ΔH , ΔS ஆகியவற்றின் மொத்த செல்வாக்கு ΔG எனும் கிப்ஸ் சக்தி வித்தியாசத்தின் மூலம் தரப்படும். மாறா வெப்பநிலை (T)யில் இவற்றுக்கிடையிலான தொடர்பு பின்வருமாறு:
    ΔG = ΔH – TΔS
  • மாறா வெப்பநிலையிலும் அமுக்கத்திலும்,
    சுயாதீன தாக்கமொன்றின் போது  ΔG < 0
    சுயாதீனமாக நடைபெறாத தாக்கமொன்றிற்கான ΔG > 0
    சமநிலையான தாக்கமொன்றிற்கான ΔG = 0
  • மாறா எந்திரப்பி தொகுதியொன்றின் (ΔS = 0) சுயாதீனத்தன்மை ΔH மூலம் தீர்மானிக்கப்படும். மாறா வெப்ப உள்ளுறையின் கீழ் (ΔH = 0) நடைபெறும் மாற்றமொன்றின் சுயாதீனத் தன்மை ΔS மூலம் தீர்மானிக்கப்படும்.

போர்ன் ஏபர் சக்கரம் (born haber cycle)

அயன் சேர்வையொன்றின் சாலக வெப்பவுள்ளுறையை காண்பதற்காக உருவாக்கியுள்ள வெப்ப இரசாயன சக்கரம் போர்ன் ஏபர் சக்கரம் எனப்படும்.
images

 

RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank