அகிலத்திலிருந்து கற்றாய்வதற்காகத் தேர்ந்தெடுத்த பகுதியை தொகுதி எனப்படும்.
கற்றலுக்காக அகிலத்திலிருந்து தேர்ந்தெடுத்த பகுதி தவிர்ந்த ஏனைய யாவும் சூழல் எனப்படும்.
சூழலையும் தொகுதியையும் பிரிக்கும் கோட்டை எல்லை எனப்படும்.
எல்லையூடாக சக்தியும் சடப்பொருளும் வேலையும் பரிமாறப்படும் தொகுதி திறந்த தொகுதி எனப்படும்.
எல்லையூடாக சக்தியும் வேலையும் பரிமாறப்படும் தொகுதி மூடிய தொகுதி எனப்படும். (எல்லை சடப்பொருள் பரிமாற்றத்திற்கு அனுமதிக்காது.)
எல்லையூடாக சக்தியும் சடப்பொருளும் வேலையும் பரிமாறப்படாத தொகுதி தனிமையாக்கிய தொகுதி எனப்படும்.
சடப்பொருளின் அளவிற்கேற்ப தீர்மானிக்கப்படும் இயல்புகள் விரி இயல்பு எனப்படும்.
உதாரணம் :- திணிவு , கனவளவு , வெப்பக் கொள்ளளவு
சடப்பொருளின் அளவின்படி தீர்மானிக்கப்படாத இயல்புகள் செறி இயல்புஎனப்படும்.
உதாரணம் :- வெப்பநிலை , அமுக்கம் , அடர்த்தி , பிசுக்குமை , மூலர் கனவளவு ,மூலர் வெப்பக் கொள்ளளவு.
தொகுதியொன்றின் வெப்பநிலை , அமுக்கம் , தொகுதியின் அமைப்பு ஆகியன பற்றிய விவரங்கள் தொகுதியின் நிலைகள் எனப்படும். குறித்த ஒரு தொகுதி தொடர்பான மேற்படி தகவல்கள் அத்தொகுதிக்கு சிறப்பானவையாகும்.
தொகுதியொன்றின் குறித்த நிலையொன்றுக்கான சிறப்பான பெறுமானத்துடன் கூடிய இயல்பு நிலைத் தொழிற்பாடு என அழைக்கப்படும். இவை தொகுதியின் வரலாற்றுடன் தொடர்புடையன அல்ல.
நிலைத் தொழிற்பாடு மாற்றமானது அதன் ஆரம்ப இறுதி நிலைகளின் மீது மாத்திரம் தங்கியிருக்கும். இது மாற்றத்தை ஏற்படுத்தும் படிமுறையிலிருந்து சுயாதீனமானது.
கனவளவு , வெப்பநிலை , அடர்த்தி , முறிவுச் சுட்டி , வெப்ப உள்ளுறை , எந்திரப்பி ஆகியன நிலைத் தொழிற்பாடுகளுக்கான உதாரணங்களாகும்.
மாறா அமுக்கத்தின் கீழ் தொகுதிக்கு வழங்கப்படும் அல்லது தொகுதியொன்றிலிருந்து வெளியேற்றப்படுகின்ற வெப்பத்தின் அளவு வெப்ப உள்ளுறை மாற்றம் (ΔH ) என அழைக்கப்படும். இது வெப்ப இயக்கவியல் இயல்பாகும்.அத்துடன் நிலைத் தொழிற்பாடும் ஆகும்.
தாக்கம் ஒன்றுடன் தொடர்புடைய வெப்ப உள்ளுறை மாற்றம் ΔH விளைவுகளினதும் தாக்கிகளினதும் வெப்ப உள்ளுறை மாற்றத்தின் மூலம் பெறப்படும். ΔH = Hவிளைவுகள் – Hதாக்கிகள்
தாக்கமொன்றுடன் தொடர்புடைய வெப்ப உள்ளுறை மாற்றம் ΔH < 0 ஆயின் தாக்கம் புற வெப்பத் தாக்கமாகும். ΔH > 0 ஆயின் தாக்கம் அக வெப்பத் தாக்கமாகும்.
IUPAC விதந்துரைப்பின்படி வெப்ப உள்ளுறை மாற்றங்களானது அலகு தாக்கம் நடைபெற்றுள்ள அளவுக்கு (kJ mol-1) (Unit extent of reaction) அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது. IUPAC மூலம் விதந்துரைக்கப்பட்டுள்ளபடியால் அதனைப் பயன்படுத்தி செய்யப்படும் கணிப்பீடுகளும் சரியானவையாக ஏற்றுக் கொள்ளப்படும்.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்