நீர்மாசாக்கும் முதல்கள்
(1) வீட்டு , விலங்கு கழிவுகள்
(2) நுண்ணங்கிகள் – பக்ரீறியா , வைரசு
(3) செயற்கை இரசாயனப் பொருட்கள் (வளமாக்கிகள் , பீடைகொல்லிகள் போன்றன)
(4) அமிழ்ந்துள்ள திண்மத் துணிக்கைகள்
(5) பார உலோகங்கள்
(6) தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சுடுநீர்
பௌதிக வழியலகுகள் (Physical parameters)
(1) வெப்பநிலை
(2) pH பெறுமானம்
(3) கடத்துதிறன் (Conductivity)
(4) கலங்கல் தன்மை (Turbidity)
(5) கரைந்துள்ள ஒட்சிசனின் அளவும் நீரின் தரமும்
(6) இரசாயன ஒட்சிசன் தேவை (COD)
(CHO)n (aq) + O2(g) → CO2(g) + y H2O (l)
Cr2O7²¯ (aq) + 14H+ (aq) + 4e → 2Cr³+ (aq) + 7H2O (l)
(7) உயிரியல் ஒட்சிசன் தேவை (BOD)
(CHO)n(aq) + O2(g) → CO2(g) + yH2O (l)
(8) கரைந்துள்ள அயன் சேர்வைகள்
(1) அடைதல் – Sedimentation
• தொங்கலாக காணப்படும் திண்ம துணிக்கைகள் செறிவாக்கப்பட்டு பிரித்தெடுக்கப்படும். அடைதலின் பின் மேற்கிடக்கின்ற நீர் தெளிவானதாக இருக்கும்.
• வெளியேறும் கழிவுத் திரவம் நீர் நிலைகளுக்குள் அகற்றப்படும் அல்லது இரண்டாம் பரிகாரத்திற்கு உட்படுத்தப்படும்.
(2) ஒருங்குதிரளல் (Coagulation)
• பெரிய நீர் விநியோகிக்கும் திட்டங்களில் ஆற்று சேற்று நீர் , அலுமினியம் உப்பை (படிகாரம்) உபயோகித்து ஒருங்கு திரட்டப்படுகின்றது.
• நீர் பெரிய நீர் தாங்கிகளில் Al(III) அல்லது Fe(III) யுடன் ஒருங்கொட்ட விடப்படும்.
• செலற்றின் தன்மையுடைய அலுமினியம் ஐதரொட்டுசைட்டு அல்லது அயன்(III) ஐதரொட்சைட்டு வீழ்படிவாகும். அது நீர் தாங்கியின் அடியில் அடையும் பொழுது நீரில் தொங்கலாக காணப்படும் சேறையும் எடுத்துச் செல்லும்.
(3) வடிகட்டல் (Flocculation & Filtration)
• இதன்போது சிறிய துகள்கள் ஒன்றுசேர்க்கப்பட்டு பெரிய துணிக்கைகள் ஆக்கப்பட்டு வடிக்கப்படும்.
• இதன் பின்னர் நீர் மெதுவாக மணல் வடிகளினூடாக செலுத்தப்படும். வெவ்வேறு வகையான மணல் வடிகள் நீர் வடிந்தோட பயன்படுத்தப்படும்.
• நுண்மணல் • பெருமணல்
• சரளைக்கல் • கல்
• வடிகட்டும் பொழுது நுண்ணுயிர்களும் , அதில் தொங்கியுள்ள பதார்த்தங்களும் அகற்றப்படும். பெரும்பாலான வடிகள் நீரில் காணப்படும் தீங்கான இரசாயனப் பதார்த்தங்களையும் அகற்றுகின்றன.
(1) குளோரீனின் பயன்பாடு
• தொற்றுநீக்கிகளாக Cl2 , ClO2 , குளோரோஅமீன் என்பன பயன்படும். இவை ஒட்சியேற்றத்தின் மூலம் பக்ரீறியாவைக் கொல்லும். மேலும் பக்ரீறியாக்கள் உருவாவதை மீதிக் குளோரீன் தடுக்கும். எனினும் மிகை குளோரீன் சேதனப்பதார்த்தங்களுடன் தாக்கமுற்று தீங்கு விளைவிக்கும் பொருட்களான trihalomethanes, குளோரீனேற்றம் செய்யப்பட்ட பீனோல் என்பவற்றை உருவாக்கும்.
(2) ஓசோனின் பயன்பாடு
• ஓசோனும் பக்ரீறியாவை ஒட்சியேற்றல் மூலம் அழிக்கிறது. எனினும் இது விரைவாகப்பிரியும். இது பக்ரீறியாவில் இருந்து மேலும் பாதுகாப்பைத் தராது. எனவே ஓசோனால் தொற்றுநீக்கப்பட்ட நீரானது உடனடியாகப் பாவிக்கப்படல் வேண்டும். ஓசோன் பக்கவிளைவுகளைத் தராது என்பதால் மனிதனால் இந் நீர் பாவிக்கப்படக்கூடியது. குளோரீன் போன்றல்லாது ஓசோனை சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் இலகுவாக உருவாக்கப்படக்கூடியது.
(3) UV கதிரின் பயன்பாடு
• இது பக்றீரியா , வைரசு இரண்டையும் அழிக்கும். ஓசோனைப் போன்று இதற்கு பக்றீரியாவில் இருந்து மேலும் பாதுகாப்பைப் பெறமுடியாது.