வாயுவொன்றின் வெப்பநிலை, அமுக்கம், கனவளவு, பதார்த்தத்தின் அளவு (மூல்) ஆகியன வாயுவின் நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும். வாயு தொடர்பான மேற்படி நான்கு கணியங்களுக்குமிடையிலான தொடர்பாக இலட்சிய வாயு சமன்பாட்டைக் காட்டலாம்.
T – தனி வெப்பநிலை
R – அகிலவாயு மாறிலி (R = 8.314 Nmmol-1K-1 / 8.314 Jmol-1K-1)
மெய்வாயுக்கள் இலட்சிய நடத்தையிலிருந்து விலகுவதற்கான காரணங்கள்
பொயிலின் விதி (Boyle’s Law) : மாறா வெப்பநிலையில் குறித்த திணிவுடைய வாயுவின் அமுக்கமானது வாயுவின் கனவளவுக்கு நேர்மாறு விகித சமனாகும்.
இலட்சிய வாயு சமன்பாட்டின் துணையுடன் பொயிலின் விதியை உய்த்தறிதல்
மாறா வெப்பநிலையில் தரப்பட்ட வாயுத் திணிவொன்றின் n.T பெருக்கம் மாறிலியாகும். R மாறிலியாகையால், nRT = k மாறிலியாகும்.
அதாவது மாறா வெப்பநிலையில் தரப்பட்ட வாயுத் திணிவின் அமுக்கம் வாயுவின் கனவளவிற்கு நேர்மாறு விகித சமனாக அமையும். (பொயிலின் விதி)
இங்கு மாறிலி k இன் பருமனானது திணிவு, வெப்பநிலை என்பவற்றில் தங்கியுள்ளது.
சாள்சின் விதி (Charls’ Law) : மாறா அமுக்கத்திலுள்ள தரப்பட்ட வாயுத் திணிவொன்றின் கனவளவு வாயுவின் தனி வெப்பநிலைக்கு நேர்விகித சமன்.
இலட்சிய வாயு சமன்பாட்டின் துணையுடன் சாள்சின் விதியை உய்த்தறிதல்
மாறா வாயுத் திணிவொன்றின் அமுக்கம் மாறாதிருக்கும் போது nR /P மாறிலியாகும்.
அவகாதரோவின் விதி : ஒரே வெப்பநிலையிலும் அமுக்கத்திலும் நிலவும் வெவ்வேறு வாயுக்களின் சம கனவளவினுள் சம எண்ணிக்கையான மூலக்கூறுகள் காணப்படும்.
இங்கு N, L ஆகியன முறையே வாயு மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் அவகாதரோவின் மாறிலியுமாகும்.
ஒரே வெப்பநிலையிலும் அமுக்கத்திலும் நிலவும் A, B ஆகிய வாயுக்களின் ஒத்த கனவளவுக்காக,
மூலர் கனவளவு