Please Login to view full dashboard.

மின்வாய் அழுத்தம்

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 05:00am

இது  2  வகைப்படும்.

  • தனி மின்வாய் அழுத்தம்
  • நியம மின்வாய் அழுத்தம்

தனி  மின்வாய்  அழுத்தம்

  • நீருள்ள  முகவையொன்றினுள்  Mg போன்ற  தாக்குதிறன் கூடிய உலோகமொன்றை அமிழ்த்தும் போது உலோகமானது   en களை  இழந்து  உலோக அயன்களாக கரைசலினுள் செல்லும்.  இதன் போது en கள் உலோக மேற்பரப்பில் விடுவிக்கப்படும்.
  • மிகவும்  குறுகிய நேரத்தில் உலோக மேற்பரப்பிலுள்ள  en கள்  கரைசலிலுள்ள  நேர் அயன்  படையினால் சூழப்பட்டு காணப்படும்.  இப்படை  மின்  இரட்டை அடுக்கு எனப்படும்.
  • உலோக  மேற்பரப்பிலிருந்து   அயன்கள்  உருவாகும் வீதமும்  மீண்டும்  உலோகத்துடன்  இணையும் வீதமும் சமமாக  காணப்படும்  போது இயக்கச் சமநிலையொன்று உருவாகும். இந்நிலையில்  உலோகத்தின்  மேல் மாறா எதிரேற்றமும்  உலோகத்தை  சூழவுள்ள  கரைசலில் மாறா எண்ணிக்கையில் உலோக அயன்களும் காணப்படும்.
    இந்நிலையில் உலோகத்திற்கும் மின்பகுபொருள் கரைசலிற்கும் இடையில் ஓர் அழுத்த வேறுபாடு தோன்றும். இவ் அழுத்தவேறுபாடு  “தனிமின்வாய் அழுத்தம்”  எனப்படும்.

  • செப்பு போன்ற  தாக்குதிறன் குறைந்த  உலோகங்கள் விரைவாக அயன்களை  உருவாக்கமாட்டாது.  இதனால்  Cu கோலில் குறைந்தளவு   en  களும் கரைசலில் குறைந்தளவு  Cu2+  அயன்களும் காணப்படும். இதன் காரணமாக அழுத்தவேறுபாடு குறைவாக  காணப்படும்.
  • Cu  இன்  சமநிலையை விட கூடியளவு இடப்புறம் நோக்கி காணப்படும். இதனால் அழுத்த வேறுபாட்டின் பருமன் Mg  இற்கு  கூடவாகும்.

மின்வாய் அழுத்தத்தைப் பாதிக்கும் காரணிகள்

  • வெப்பநிலை
  • மின்பகுபொருளின் செறிவு
  • அமுக்கம் (வாயுவெனின்)
  • மின்வாயின் தன்மை

நியம மின்வாய் அழுத்தம்

  • மின்வாய் அழுத்தம், நியம மின்வாய் அழுத்தம் இரண்டும் செறிவியல்பாகும். ஏனெனில் இவை மின்வாயாக பயன்படுத்தப்படும் உலோகத்தின் அளவில், வாயு மின்வாயாக பயன்படுத்தப்படும் வாயுக்களின் கனவளவில், கரைசலின் கனவளவில்  தங்கியிருக்க மாட்டாது.
  • மின்பாயமொன்றின் மின்வாய் அழுத்தத்தை நேரடியாக அளக்க முடியாது. சில மின்வாய்களுக்கு சார்பாகவே மின்வாய் அழுத்தங்கள் அளவிடப்படுகின்றன. சார்பு மின்வாயாக நியம ஐதரசன் மின்வாய் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது.
  • நியம நிபந்தைனையின் கீழ் நியம ஐதரசன் மின்வாய் சார்பாக அளவிடப்படும் மின்வாய் அழுத்தங்கள் நியம மின்வாய் அழுத்தம் எனப்படும்.

Zn(s) / Zn2+(aq) இன் மின்வாயின் நியம மின்வாய் அழுத்தத்தை துணிதல்

♦  இங்கு நியம ஐதரசன் மின்வாயின் மின்வாய் அழுத்தம் பூச்சியம் எனக் கொள்ளப்படும்.

 

செறிவு, அமுக்க மாற்றத்தால் மின்வாய் அழுத்தங்களில் ஏற்படும் மாற்றங்கள்

  • Cu2+(aq) + 2e  →  Cu(s)
    Cu2+ இன் செறிவு கூடும் போது சமநிலை முன்னோக்கி நகர்வதனால் நேர் மின்வாய் அழுத்தம் கூடும். Cu2+ இன் செறிவு குறையும் போது சமநிலை பின்னோக்கி நகர்வதனால் en கள் விடுவிக்கப்படும். எனவே, நேர்மின்வாய் அழுத்தம் குறையும்.
  • Zu2+(aq) + 2e  →  Zu(s)
    Zu2+ இன் செறிவு குறையும் போது சமநிலை பின்னோக்கி நகரும். en கள் விடுவிக்கப்படும். எனவே, மறை மின்வாய் அழுத்தம் கூடும்.  Zu2+ இன் செறிவு கூடும் போது சமநிலை முன்னோக்கி நகர்வதனால் en களின் அளவு குறையும். எனவே, மறை மின்வாய் அழுத்தம் குறையும்.
  • Cl2(g) + 2e  →  2Cl(aq)
    Cl2(g) அமுக்கத்தை கூட்டும் போது சமநிலை முன்னோக்கி நகரும். இதனால் மின்வாய் அழுத்தம் மேலும் நேராகும்.
  • 2H+(aq) + 2e  → H2(g)
    H+ இன் செறிவை கூட்டும் போது மின்வாய் அழுத்தம் நேர்பெறுமானமாகும். H+ இன் செறிவை குறைக்கும் போது மின்வாய் அழுத்தம் மறை பெறுமானத்தை பெறும். H2 வாயுவின் அமுக்கத்தை கூட்ட மின்வாய் அழுத்தம் மறை பெறுமானம் பெறும்.
மின்வாய்களின் வகைகள்

உலோகம் – உலோக  அயன்  மின்வாய்

சமநிலை மின்வாய் தாக்கம் : Cu2+(aq) + 2e  ↔  Cu(s)

அரைக்கல வரைபடம்

Cu(s)  /  Cu2+(aq)

தாழ்த்தேற்ற மின்வாய்

சமநிலை மின்வாய் தாக்கம் : MnO4(aq)  + 8H+(aq) + 5e  ↔  Mn2+(aq)  +  4H2O(l)

அரைக்கல வரைபடம்

Pt(s)   /   MnO4(aq),  Mn2+(aq),  H+(aq)

மேற்படி  மின்வாயின் அழுத்த வேறுபாடு  MnO4,  Mn2+,  H+ என்பவற்றின் செறிவிலும் கரைசலில் வெப்பநிலையிலும் தங்கியுள்ளது.

(உ-ம்) :

  • Pt(s)  /  Cr2O72-(aq), Cr3+(aq),  H+(aq)
  • சமநிலை மின்வாய் தாக்கம் : 14H+(aq) + Cr2O72(aq) + 6e  ↔  2Cr3+(aq) + 7H2O(l)
  • Pt(s)  /  Fe3+(aq),  Fe2+(aq)
  • சமநிலை மின்வாய் தாக்கம் : Fe3+(aq) + e  ↔ Fe2+(aq)

உலோகம் – உலோகத்தின் கரையும் தகவற்ற உப்பை கொண்ட மின்வாய்

[A]   

அரைக்கல வரைபடம்

Ag(s),  AgCl(s)    /   Cl(aq)

சமநிலை மின்வாய் தாக்கம் :  AgCl(s) + e  ↔  Ag(s) +  Cl(aq)

  • மேற்படி மின்வாயின் மின்வாய் அழுத்தம் Cl- இன் செறிவிலும் கரைசலின் வெப்பநிலையிலும் தங்கியிருக்கும் கரைசலின் செறிவு, வெப்பநிலை கூடும் போது மின்வாய் அழுத்தம் குறையும்.
  • இங்கு AgCl(s) ஆனது நுண்துளை இதனால் 3  அவத்தைகளும் ( Ag(s), AgCl(s),  Cl(aq) ) ஒன்றுடன் ஒன்று தொடர்பிலிருக் கும். எனவே, Ag அயனாக்கமடைவதன்  மூலம்  உருவாகும் Ag+  அயன்கள் Cl  உடன் சேர்ந்து  AgCl  ஆக  படிவாகும்.

[B]   கலோமல் மின்வாய்

அரைக்கல வரைபடம்

Hg(l),  Hg2Cl2(s)   /  Cl(aq)

சமநிலை  மின்வாய் தாக்கம் :  Hg2Cl2(s)  + e  ↔  2Hg(l)  +  2Cl(aq)

  • மேற்படி  மின்வாயில்  மின்வாய்  அழுத்தம்  Cl  இன் செறிவு, வெப்பநிலை கூடும் போது குறையும்.

வாயு மின்வாய் – ஐதரசன் மின்வாய்

அரைக்கல வரைபடம்

Pt(s),  H2(g)   /  H+(aq)

சமநிலை மின்வாய் தாக்கம் :  2H+(aq)  +  2e   ↔ H2(g)

  • இவ்வரைகலத்தின் அழுத்தவேறுபாடு, H2(g) இன் அமுக்கத்திலும், கரையிலுள்ள  H+(aq) இன் செறிவிலும் தங்கியிருக்கும். அமுக்கம் 1 atm ஆகவும்  H+(aq)  இன் செறிவு  1 moldm-3  ஆகவும் உள்ள போது அழுத்தவேறுபாடு ‘0’ எனக் கொள்ளப்படும். இந்நிபந்தனையில் மேற்படி மின்வாய்  நியம ஐதரசன் மின்வாய் எனப்படும்.
  • இந்நிபந்தனையின்  கீழ்  ஐதரசன் மின்வாயின்,  ஒட்சியேற்றல் அழுத்தம்,  தாழ்த்தல் அழுத்தம் என்பன பூச்சியம் எனக் கொள்ளப்படும்.
மின்னிரசாயனத் தொடர்
  • நியம மின்வாய் அழுத்தங்களை (தாழ்த்தல் அழுத்தம்) ஏறுவரிசையில் ஒழுங்குபடுத்தும் போது பெறப்படும் தொடர், மின்னிரசாயனத் தொடர் எனப்படும்.
  • இத்தொடரில் தாழ்த்தல் அழுத்தப் பெறுமானம் கூடியது, வன்மையாக ஒட்சியேற்றும் கருவியாகும்.
  • தாழ்த்தல் அழுத்தப் பெறுமானம் குறைந்தது, வன்மையான தாழ்த்தும் கருவியாகும்.
  • மின்னிரசாயன தொடரின் வழியே மேலிருந்து கீழாக தாழ்த்தும் வலிமை குறைந்து  ஒட்சியேற்றும்  வலிமை  கூடும்.
RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank