Please Login to view full dashboard.

இயக்கவியல் மூலக்கூற்று கொள்கை

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 07:36am

வாயுக்களின்  மூலக்கூற்று  இயக்கவியல்  கொள்கையின்  எடுகோள்கள்

  1. வாயுக்கள் உயர்ந்த வெவ்வேறு கதிகளில் எழுந்தமானமாக நேர்கோட்டில் அசையும். மிகவும் சிறிய துணிக்கைகளளைக் கொண்டுள்ளது.
  2. எழுமாறாக இயங்கும் மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று மோதும். அத்துடன் பாத்திரத்தின் சுவருடனும் மோதும். எல்லா மோதல்களும் பூரண மீள்தகு தன்மையுடையவை.நிறை மீளியல்பு மோதுகையின் போது ஒரு மூலக்கூறின் இயக்கப்பண்பு சக்தி குறித்த அளவினால் குறையும் ஆயின் மற்றைய மூலக்கூறின் இயக்கச் சக்தி அதற்கு சமனான அளவினால் கூடும். அல்லது மோதலில் ஈடுபடும் மூலக்கூறுகளின் மொத்த இயக்கச் சக்தி மோதுகை காரணமாக மாற்றமடைவதில்லை.
  3. மூலக்கூறுகள் இடையே கவர்ச்சி விசை, தள்ளுகை விசை இல்லை. இதனால் ஒரு மூலக்கூறின் இயக்கமானது மற்றைய மூலக்கூறின் இயக்கம், நிலை என்பவற்றில் முற்றாக தங்கியிருப்பதில்லை.
  4. மோதுகையின் போது எடுக்கும் நேரமானது (மோதிக்கொண்டிருக்கும் நேரம்) மோதுகைகளுக்கிடையே செலவிடும் நேரத்துடன் புறக்கணிக்கத்தக்கது. ஏனெனில், மூலக்கூற்றிடை தூரமானது மூலக்கூறுகளின் விட்டத்தை விட கூடியது.
  5. வாயு மூலக்கூறுகள் அடங்கும் பாத்திரத்தின் சுவரின் மீது மோதுவதால் வாயு அமுக்கம் உண்டாகிறது.
  6. மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று மோதி மீளப் பாயும்போது தொகுதியின் மொத்த இயக்கப்பாட்டுச் சக்தி மாறிலியாகும்.
வாயுக்களின் மூலக்கூற்று இயக்கவியல் சமன்பாடு

  • P – அமுக்கம்
  • V – வாயுவின் கனவளவு
  • m – வாயு துணிக்கை ஒன்றின் / மூலக்கூறு ஒன்றின் திணிவு
  • N – வாயு மூலக்கூறுகளின் எண்ணிக்கை / துணிக்கைகளின் எண்ணிக்கை
  • c2 – இடைவர்க்ககதி

ஒவ்வொரு  வாயு  துணிக்கைகளினதும்  கதி  முறையே, c1, c2, ……cN

சராசரிக் கதி : எல்லா மூலக்கூறுகளினதும் கதிகளினது கூட்டுத்தொகையை மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கையினால் பிரிப்பதன் மூலம் பெறப்படும்.
சராசரிக் கதியின் பெறுமானம் உச்ச நிகழ்தகவு கதியிலும் பார்க்க கூடியது.

கதிவர்க்க சராசரி / கதிவர்க்க இடை :  எல்லா மூலக்கூறுகளினதும் கதிகளினது வர்க்கத்தினது சராசரி ஆகும். வழமையாக இக்கதி அதன் வர்க்க மூலத்தினால் தரப்படும்.

√c2  என்பது, இடை வர்க்கமூல வேகம் / இடை வர்க்கமூல கதி எனப்படும். இது சராசரிக் கதியிலும் கூடியது.

   இலிருந்து பெறப்படும் தொடர்புகள்   

  • மாறா வெப்பநிலையில் அமுக்கத்தை கூட்டும் போது அடர்த்தியும் கூடும். இதனால் P / d மாறாது. எனவே, c2 மாறா வெப்பநிலையில் ஒரு மாறிலி ஆகும்.

  • கதிவர்க்க இடையானது இலட்சிய வாயுவின் தன்மையிலும் (மூலக்கூற்றுத் திணிவு M  இலும்) வெப்பநிலையிலும் தங்கியிருக்கும். ஆனால் மாறா வெப்பநிலையில் குறித்த இலட்சிய வாயுவிற்கு  c2  மாறிலியாகும்.

 

சராசரி  இயக்கச் சக்திக்கும்  தனி வெப்பநிலைக்கும் இடையிலான தொடர்பு

  • சராசரி  இயக்கப்பண்பு சக்தி (E) = ½mc2

  • இலட்சிய வாயு மூலக்கூறு ஒன்றிக்கான சராசரி இயக்கப்பண்பு சக்தி  E = 3/2 kT
  • ஒரு மூல் இலட்சிய வாயுவிற்கான சராசரி இயக்கப்பண்பு சக்தி  E = 3/2 RT
  • வெப்பநிலை  கூடும் போது  எல்லா  இலட்சியவாயு மூலக்கூறுகளின் சராசரி  இயக்கச்சக்தி  அதிகரிக்கும். ஆனால்  எல்லா இலட்சியவாயு மூலக்கூறுகளினதும்  இயக்கச்சக்தியும் அதிகரிப்பு ஏற்படுவதில்லை. ஏனெனில், மூலக்கூறுகளுக்கிடையிலான  மோதுகைகள்  காரணமாக சில  மூலக்கூறுகளின் இயக்கச் சக்தி கூடலாம்  அல்லது குறையலாம்.
வாயு மூலக்கூறுகளின் கதி
  • கொள்கலன் ஒன்றிலுள்ள வாயு மூலக்கூறுகள் எந்த இயல்பை உடையதாயினும் எந்த வெப்பநிலையில் இருப்பினும் குறிப்பிட்ட கணத்தில் அவை பூச்சியம் தொடக்கம் ஆகக் கூடிய பெறுமானம் வரையிலான கதிகளின் வீச்சை கொண்டிருக்கும்.
  • வாயு மூலக்கூறுகளுக்கிடையிலான மோதுகை காரணமாக தனிப்பட்ட மூலக்கூறுகளின் கதிகளில் தொடர்ச்சியான மாற்றங்கள் உண்டாகும். இதனால் மூலக்கூறுகளின் உந்தமும் தொடர்ந்து மாறுபடும்.
  • பெருமளவிலான மூலக்கூறுகளை கருதும் போது மிகவும் தாழ்ந்த கதிகளை கொண்ட, மிகவும் உயர்த கதிகளை கொண்ட மூலக்கூறுகளின் எண்ணிக்கை மூலக்கூற்றுப் பின்னம் சிறியதாகும்.
  • குறிப்பிடத்தக்களவு உயர்வான இடைத்தரமான கதியைக் கொண்ட மூலக்கூறுகளின் எண்ணிக்கை / பின்னம் உச்ச அளவில் காணப்படும். இவ்விடைத்தர கதியானது உச்ச நிகழ்தகவு கதி / அதிக நிகழ்தகவுடைய கதி எனப்படும். மேற்படி முடிவுகளை அடிப்படையாக கொண்டு Maxvel Botzman இனால் பின்வரும் வலைகோடு அறிமுகப்படுத்தப்பட்டது.

  • இங்கு  100 ms-1, 200 ms-1, 800 ms-1  என்பன  உச்ச நிகழ்தகவு கதிகளாகும். வரைபின்  உச்சி  x அச்சில் வெட்டும் புள்ளி உச்ச நிகழ்தகவு கதியைத் தரும். வரைபின் உச்சி  y  அச்சை வெட்டும் புள்ளி உச்ச நிகழ்தகவு கதியைக் கொண்ட மூலக்கூறுகளின் பின்னத்தைத் தரும்.
  • வளையினால் அடைக்கப்பட்ட பரப்பானது மொத்த மூலக் கூறுகளின்  எண்ணிக்கையைத்  தரும். இங்கு ஒவ்வொரு வளையினாலும் அடைக்கப்பட்ட பரப்பு ஒன்றுக்கொன்று சமனாகும். ஏனெனில் வாயு மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை மாறிலியாகும்.
  • மிகக் குறைந்த கதியையும் மிகக் கூடிய கதியையும் கொண்ட மூலக்கூறுகளின் பின்னங்கள் அண்ணளவாக பூச்சியமாகும். ஆனால் பூச்சியத்திற்கு சமனன்று.

 

  • வெப்பநிலை கூடும் போது சராசரி கதி கூடும்.
  • சராசரி கதி கூடுவதால் கதிப்பரம்பல் கூடும்.
  • உச்ச நிகழ்தகவு கதி கூடும்.
  • உச்ச நிகழ்தகவு கதியை கொண்ட மூலக்கூறுகளின் பின்னம் குறையும்.
  • குறித்த கதியை கொண்ட மூலக்கூறுகளின் பின்னம் கூடும் / குறையும்.

  • வெப்பநிலை  அதிகரிப்பானது  வாயு மூலக்கூறுகளின்  சராசரி கதியின்  அதிகரிப்புக்கு  நேர்விகித சமனன்று.

உயர் வெப்பநிலையில் வாயு மூலக்கூறுகள் கூடிய கதிப்பரம் பலையும் கூடிய சராசரிக் கதியையும் கொண்டிருக்கும்.

மூலக்கூற்று  கதிப்பரம்பலும்  மூலக்கூற்று  திணிவும்

மேற்படி சமன்பாட்டின் படி வாயுக்களின் மூலக்கூற்றுத் திணிவு கூடும் போது சராசரி கதி குறையும். இதனால் கதிப்பரம்பலும் குறையும்.

மேற்படி வாயுக்களில் Ar மூலக்கூற்றுத் திணிவு கூடியது. குறைந்த சராசரிக்கதியையும் குறைந்த கதிப்பரம்பலையும் கொண்டது.

மாறா வெப்பநிலையில் குறித்த வாயு  ஒன்றின்  வெவ்வேறு மூலக்கூறுகளின்  எண்ணிக்கைக்கான  கதிப்பரம்பல் வளையி

மூலக் கூறுகளின் எண்ணிக்கை கூடும் போது,

  • கதிப்பரம்பல், சராசரிக்கதி மாறாது.
  • உச்ச நிகழ்தகவு கதி மாறாது.
  • உச்ச நிகழ்தகவு கதியை உடைய மூலக்கூறுகளின் எண்ணிக்கை / பின்னம் கூடும்.
  • குறித்த கதியிலும் கூடுதலான கதியை உடைய மூலக்கூறுகளின் எண்ணிக்கை கூடும். ஆனால் பின்னம் மாறாது.

 

RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(1)
Akash Santhosh
akash santhosh commented at 12:43 pm on 04/01/2018
அலகு 01 குறிப்புக்கள் ஏன் இல்லை?
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank