மூலகத்தின் வலுவளவு ஓட்டின் இலத்திரன்கள் பிணைப்புக்களை உருவாக்குவதில் பங்குபற்றும்.
பல் அணுத்தொகுதியின் சக்தியை இழிவளவாக்க அணுக்களிடையே நிலவும் கவர்ச்சி இரசாயனப் பிணைப்பு எனப்படும்.
அயன் பிணைப்பு
அதிக மின்னெதிர் வித்தியாசம் உள்ள அணுச் சோடியொன்றில் பிணைப்பொன்றை உருவாக்கும் போது ஒரு அணுவின் வலுவளவு இலத்திரன் மற்றைய அணுவொன்றுக்கு வழங்கப்படுவதால் உருவாகும் நேர் , மறை அயன்களுக்கிடையே ஏற்படும் நிலை மின் கவர்ச்சி அயன் பிணைப்பென அழைக்கப்படும்.
திண்ம நிலையிலுள்ள அயன்கள் நிலைமின் விசைகளினால் கவரப்பட்டு திட்டவட்டமான கோலமொன்றில் அடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அயன் சேர்வையொன்று திண்ம நிலையிலுள்ள போது அயன்களுக்கு அசையுமாற்றல் இல்லை. ஆயினும் துணிக்கைகள் அமைந்துள்ள நிலையிலிருந்தவாறே அதிர்வுறக் கூடியன. இதன்படி அயன் பளிங்கொன்று மின்னை ஊடுகடத்தமாட்டாது.
திரவ நிலையிலுள்ள அயன்கள் வேறாகிக் காணப்படுகின்றன. உருகிய நிலையில் அயன் சேர்வை யொன்றுள்ள போது அயன்களுக்கு அசைவு இயக்கம் இருப்பதனால் அங்கு மின்கடத்தப்படும்.
அயன் சேர்வையில் அடங்கும் அன்னயனினதும் கற்றயனினதும் தன்மைக்கேற்ப கற்றயன் அன்னயனினது இலத்திரன் முகிலை கவரும் (கற்றயனின் முனைவாக்கும் வலு).
அதே நேரம் கருவைத் தள்ளும். இதனால் அன்னயனை முனைவாக்கும் அல்லது விகாரமடையச் செய்யும். இதனால் அன்னயனின் இலத்திரன் முகிலின் வடிவம் மாற்றமடையும் (அன்னயனின் முனைவாகுதன்மை அல்லது முனைவாக்கம் அடையும் ஆற்றல்).
முனைவாக்கம் அடையும் அளவு சிறிது எனின் பிணைப்பு அயன் பிணைப்பாகக் காணப்படும். முனைவாக்கம் அடையும் அளவு பெரிது எனின் அன்னயனின் இலத்திரன் முகில் கற்றயனை நோக்கிக் கவரப்பட்டு கணிக்கத்தக்க அளவு பங்கீட்டு வலு இயல்பு காணப்படும். கற்றயன்:முனைவாக்கும் வலு உயர்வு :-சிறிய பருமன் , உயர்ந்த ஏற்றம் முனைவாக்கும் வலு உயர்வு அல்லது இரண்டும்
அன்னயன்: விகாரமடைதல் அல்லது முனைவாக்கத்திற்கு உட்படும் வலு உயர்வு பெரிய பருமன் உயர்ந்த ஏற்றம் அல்லது இரண்டும்
பங்கீட்டுவலு பிணைப்புகள்
பிணைப்பு இலத்திரன் சோடிகளை இரண்டு அணுக்களினாலும் பொதுவாகப் பேணுவதன் மூலம் பங்கீட்டுவலுப் பிணைப்பு உருவாகும். அணு ஒபிற்றல்கள் மேற்பொருந்துவதனால் பங்கீட்டுவலுப் பிணைப்புகள் உருவாகும்.
பங்கீட்டுவலுப் பிணைப்பினால் இணைக்கப்பட்ட இரு அணுக்களின் மின்னெதிர்த்தன்மை வித்தியாசம் பூச்சியம் எனின் அப்பிணைப்பு முனைவாக்கம் அற்ற பங்கீட்டுவலுப் பிணைப்பு எனப்படும். ஏனைய பங்கீட்டுவலுப் பிணைப்புகள் முனைவாக்கமுடைய பங்கீட்டுவலுப் பிணைப்புகள் எனப்படும்.
தனித்த இலத்திரன் சோடிகள் உள்ள அணுவொன்றின் ஓபிற்றல் வேறு அணுவின் வலுவளவு ஒட்டின் வெற்று ஓபிற்றலுடன் ஒன்றன் மீதொன்று பொருந்தி பிணைப்பை உருவாக்க முடியும். இது ஈதற் பிணைப்பு எனப்படும். இங்கு சுயாதீன இலத்திரன் சோடியை வழங்கும் பேதத்தை வழங்கும் கூட்டமாகவும் (லூயிஸ் மூலம்) பிணைப்பை உருவாக்க இலத்திரன் பெறும் பேதத்தை வாங்கி கூட்டம் (லூயிஸ் அமிலம்) எனவும் அழைப்பர்.
உலோகப் பிணைப்புகள்
உலோக அணுக்களின் வலுவளவு ஓட்டின் இலத்திரன்கள் அணுவுடன் தளர்வாக பிணைந்துள்ளன. ஆகவே உலோக அணு வலுவளவு ஓட்டின் இலத்திரன்களை வெளியேற்றி நேர் அயனாக நிலவ முனையும். இவ்வாறு உலோக அணுக்களிலிருந்து விடுவிக்கப்பட்ட இலத்திரன் கடலில் அமிழ்ந்துள்ள நேர் அயன்களைக் கொண்ட தொகுதியொன்று உருவாகும்.
நேர் அயன்களுக்கும் இலத்திரன் கடலுக்குமிடையே மின் நிலையியல் கவர்ச்சி உருவாகி உலோக பிணைப்பு உருவாகும்.
உலோக அயனின் பருமன் சிறிதான போதும் கூடிய ஏற்றம் உள்ள போதும் உலோக பிணைப்பை உருவாக்குவதில் பங்குபற்றும் இலத்திரன்களின் எண்ணிக்கை அதிகமாகும் போதும் வலிமையான உலோக பிணைப்பு உருவாகும்.
உலோக பிணைப்பின் வலிமை அதிகரிக்கும் போது உலோகத்தின் உருகுநிலை அதிகமாகவிருக்கும்.
பங்கீட்டுவலுப் பிணைப்பினால் பிணைக்கப்பட்ட மூலக்கூறுகளுக்குள்ளும் அல்லது அயன் தொகுதிகளுக்கும் அல்லது உலோகச் சாலகத்தினுள் நிலவும் கவர்ச்சியை ஆரம்ப இடைத்தாக்கம் என அழைக்கலாம்.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்