Please Login to view full dashboard.

மின்னிரசாயனக் கலங்கள்

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 05:00am
முதன்மைக் கலங்கள்

மின்சக்தியை வழங்குவதன் மூலம் கலத்தாக்கத்தை மீளப் பெறமுடியாத கலங்கள் முதன்மைக் கலங்கள் என அழைக்கப்படும்.

முதன்மைக் கலங்களை பாவனைக்கு பின்பு மீள் ஏற்றம் செய்ய முடியாது. எனவே முதன்மைக் கலங்கள் இரசாயன ரீதியில் மீளும் தன்மையற்றவை.

இலெக்கிளொஞ்சிக் கலம்

  • மின்பகுபொருள் –  NH4Cl / ZnCl2
  • நேர் முனை – C / MnO2
  • மறை முனை – Zn
  • கதோட்டு தாக்கம் – 2MnO2(s) + NH4+(aq) + 2e → Mn2O3(aq) + H2O(l) + 2NH3(g)
  • அனோட்டு தாக்கம் – Zn(s) → Zn2+(aq) + 2e
  • கலத்தாக்கம் – 2MnO2(s) + Zn(s) + H2O(l) → Mn2O3(s) + Zn2+(aq) + 2OH(aq)
  • கலத்தின் விளைவு அண்ணளவாக 1.5 – 1.6V ஆகும்.
  • இக்கலம் உற்பத்தி செலவு குறைந்தது.
  • குறைந்தளவு இறக்கமடையும் இயல்புடையது.
  • இதன் வாழ்நாள் முழுவதும் அழுத்தவீழ்ச்சி தொடரும்.

டேனியல் கலம்

  • மின்பகுபொருள் – ZnSO4 / CuSO4
  • நேர் முனை – Cu
  • மறை முனை – Zn
  • கதோட்டு தாக்கம் – Cu2+(aq) + 2e  →  Cu(s)
  • அனோட்டு தாக்கம் – Zn(s) →  Zn2+(aq) + 2e
  • கலத்தாக்கம் – Zn(s) + Cu2+(aq) → Zn2+(aq)  +  Cu(s)
துணையான கலங்கள்

மின்னிறக்கமடைந்த கலமொன்றை மின்னேற்றம் செய்வதன் மூலம் விளைவுகளிலிருந்து தாக்கிகளை மீளவும் புதுப்பிக்கக் கூடிய கலங்கள் துணைக் கலங்கள் எனப்படும்.

அதாவது, துணைக்கலங்களை பாவனைக்கு பின்னர் மீள் ஏற்றம் செய்ய முடியும். எனவே துணையான கலங்கள் இரசாயன ரீதியாக மீளும் தன்மையுடையவை.

 ஈயசேமிப்புக்கலம்

  • மின்பகுபொருள் – dill H2SO4
  • அனோட்டு – Pb
  • கதோட்டு – PbO2
  • அனோட்டு தாக்கம் (மின்னிறக்கத்தின் போது*) – Pb(s) + SO42-(aq) → PbSO4(s) + 2e
  • கதோட்டு தாக்கம் (மின்னிறக்கத்தின் போது*) – PbO2(s) + 4H+(aq) + SO42-(aq) + 2e → PbSO4(s) + 2H2O(l)    [ *  = கலத்தை மின்னேற்றும் போது இதற்கு எதிரான தாக்கம் (பின்தாக்கம்) நிகழும். ]
  • மின்னிறக்கச் செயன்முறையின் போது PbSO4  ஆனது இரண்டு மின்வாய்களிலும் உருவாகின்றது.
  • கலத்தை மின்னேற்றும் போது அனோட்டு, கதோட்டு தாக்கங்கள்  எதிர்த்திசையில்  நிகழும்.
  • நடைமுறையில் ஈயசேமிப்புக் கலம் 100% இரசாயன ரீதியில் மீளும் தன்மையற்றது. இதன் காரணமாகவே மோட்டார் வாகனங்களில் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் புதிய பற்றரியொன்றை பிரதியீடு செய்ய வேண்டியுள்ளது. இதற்கு காரணம், பின்வரும் மீளும் தன்மையற்ற இரசாயனச் செயன்முறை நிகழ்வதாலாகும்.
    Pb(s) + 2H+(aq) →  Pb2+(aq) + H2(g)
  • ஈயசேமிப்புக் கலம் தொழிற்படும் போது மின்பகுபொருளின் அளவு, செறிவு குறைவடையும்.
எரிபொருள் கலம்

மின்னிரசாயன மின்வாய் தாக்கங்களுக்காக புறத்தேயிலிருந்து தாக்கிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் மின்னிரசாயனக் கலம் எரிபொருள் கலம் எனப்படும்.

எரிபொருள் கலம் சக்தியை சேமிப்பதில்லை. தாக்கிகள் வெளியிலிருந்து  தொடர்ச்சியாக  வழங்கப்படும்.

கார பெகோன் எரிபொருள் கலம்

 

  • ஈர்ஐதரசனும்  ஈரொட்சிசனும்  மற்றும்  மெதேனும் ஈரொட்சிசனும் இதற்காகப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும்.
  • 200°C  இல்  பேணப்படும் செறிந்த  கார KOH / NaOH கரைசலே  பெரும்பாலும்  மின்பகுபொருளாக  அமையும்.
  • பெரும்பாலும் நுண்துளைகொண்ட (porous) காபன், நிக்கல் மின்வாய்களே  பயன்படுத்தப்படும்.
  • வாயுக்களாக  H2, O2  அல்லது  CH4, O2 பயன்படுத்தப்படும்.
  • ஈர்ஐதரசன் – ஈரொட்சிசன்  எரிபொருள்  கலத்துக்குரிய  தாக்கங்கள் வருமாறு;
    • அனோட்டு  தாக்கம் (ஒட்சியேற்றம்) : 2H2(g) + 4OH(aq) → 4H2O(l) + 4e
    • கதோட்டு தாக்கம் (தாழ்த்தல்) : O2(g) + 2H2O(l) + 4e  →  4OH(aq)
    • கலத்தாக்கம் : 2H2(g) + O2(g)  → 2H2O(l)
  • கொள்கை ரீதியில் இக்கலத்தின் வோல்ற்றளவு  1.3 V ஆகும். ஆனால் நடைமுறையில்  1 – 1.1 V ஐ பெற முடியும்.
  • கார பெகோன் எரிபொருள் கலம் 1 kWh இற்கு கிட்டத்தட்ட 1l தூய நீரை உருவாக்கும்.
  • பயன்பாடு :
    • விண்கலம் விமானங்களில் தூய நீரை, மின்னை பெறுவதற்கு பயன்படுத்தப்படும்.
RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank