Please Login to view full dashboard.

இலட்சிய வாயு மாதிரி

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 06:00am

 

 

இலட்சிய வாயு
  • எந்தவொரு வெப்பநிலையிலும்  அமுக்கத்திலும்  PV = nRT எனும் சமன்பாட்டிற்கு  இணங்கி  நடக்கும்  வாயுக்கள் இலட்சிய வாயுக்கள்  எனப்படும்.
  • இலட்சிய வாயுக்களின் பௌதிக இயல்புகள் மேற்படி காரணிகளில் மட்டுமே தங்கியிருக்கும்.
  • மெய்வாயுக்களுக்கு (O2, N2, CO2 ……) மேற்படி சமன்பாட்டை எல்லா  வெப்பநிலையிலும்  அமுக்கத்திலும்  பிரயோகிக்க முடியாது.  உயர் வெப்பநிலையிலும்  தாழ் அமுக்கத்திலும் மட்டுமே பிரயோகிக்க முடியும்.
  • இலட்சியவாயு  மூலக்கூறுகளுக்கிடையே  மூலக் கூற்றிடை கவர்ச்சி விசையோ, தள்ளுகைவிசையோ இல்லை.
  • இலட்சியவாயு  மூலக்கூறுகளின் பருமன் அவை அடைக்கும் பாத்திரத்தின் கனவளவு சார்பாக புறக்கணிக்கத்தக்கது. ஆனால் இலட்சியவாயு மூலக்கூறுகளுக்கு கனவளவு உண்டு. திணிவு உண்டு. அதாவது, இலட்சியவாயு புள்ளித் திணிவு நடத்தையை காட்டும்.

வாயுவொன்றின் வெப்பநிலை, அமுக்கம், கனவளவு, பதார்த்தத்தின் அளவு (மூல்) ஆகியன வாயுவின் நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும். வாயு தொடர்பான மேற்படி நான்கு கணியங்களுக்குமிடையிலான தொடர்பாக இலட்சிய வாயு சமன்பாட்டைக் காட்டலாம்.

T – தனி வெப்பநிலை
R – அகிலவாயு மாறிலி (R = 8.314 Nmmol-1K-1 / 8.314 Jmol-1K-1)

மெய்வாயுக்கள்   இலட்சிய  நடத்தையிலிருந்து விலகுவதற்கான  காரணங்கள்

  1. மெய்வாயு மூலக்கூறுகளுக்கிடையே கவர்ச்சிவிசை காணப்படுதல்.
  2. மெய்வாயு மூலக்கூறுகளின் பருமன் அவை அடைக்கும் பாத்திரத்தின் கனவளவு சார்பாக புறக்கணிக்க முடியாது.
  • எனவே மெய்வாயுக்களின் பௌதிக இயல்புகளின் P, V, n, T என்பவற்றுடன் மூலக்கூற்றிடை கவர்ச்சி விசை, மூலக் கூற்றிடை தள்ளுகை விசை, பருமனிலும் தங்கியுள்ளது.
  • இலட்சிய வாயுக்களின் P, V, n, T என்பவற்றுக்கிடையிலான தொடர்புகள் வாயு விதிகளினால் வரையறுக்கப்படுகின்றன.
வாயுவிதிகள்

பொயிலின் விதி (Boyle’s Law) : மாறா வெப்பநிலையில் குறித்த திணிவுடைய வாயுவின் அமுக்கமானது வாயுவின் கனவளவுக்கு நேர்மாறு விகித சமனாகும்.

இலட்சிய வாயு சமன்பாட்டின் துணையுடன் பொயிலின் விதியை உய்த்தறிதல்

மாறா வெப்பநிலையில் தரப்பட்ட வாயுத் திணிவொன்றின் n.T பெருக்கம் மாறிலியாகும். R மாறிலியாகையால், nRT = k மாறிலியாகும்.

அதாவது மாறா வெப்பநிலையில் தரப்பட்ட வாயுத் திணிவின் அமுக்கம் வாயுவின் கனவளவிற்கு நேர்மாறு விகித சமனாக அமையும். (பொயிலின் விதி)

இங்கு மாறிலி k  இன்  பருமனானது  திணிவு, வெப்பநிலை என்பவற்றில் தங்கியுள்ளது.

சாள்சின் விதி (Charls’ Law) : மாறா அமுக்கத்திலுள்ள தரப்பட்ட வாயுத் திணிவொன்றின் கனவளவு  வாயுவின்  தனி வெப்பநிலைக்கு நேர்விகித  சமன்.

இலட்சிய வாயு சமன்பாட்டின் துணையுடன் சாள்சின் விதியை  உய்த்தறிதல்

மாறா வாயுத் திணிவொன்றின் அமுக்கம் மாறாதிருக்கும் போது   nR /P மாறிலியாகும்.

அவகாதரோவின் விதி : ஒரே வெப்பநிலையிலும் அமுக்கத்திலும் நிலவும் வெவ்வேறு  வாயுக்களின்  சம கனவளவினுள்  சம  எண்ணிக்கையான  மூலக்கூறுகள் காணப்படும்.

இங்கு N, L ஆகியன முறையே வாயு மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் அவகாதரோவின் மாறிலியுமாகும்.

ஒரே வெப்பநிலையிலும் அமுக்கத்திலும் நிலவும் A, B ஆகிய வாயுக்களின்  ஒத்த  கனவளவுக்காக,

 

 

மூலர் கனவளவு

  • வாயு ஒன்றின் மூலர் கனவளவு என்பது  ஒரு மூல் வாயுவின் கனவளவாகும்.
  • ஒரு வாயுவின் மூலர் கனவளவு வெப்பநிலை, அமுக்கத்துடன் மாறும்.
  • இதன்படி, 0°C,  1 atm  இல் ஒரு மூல் வாயுவின் கனவளவானது நியம வெப்பநிலை, அமுக்கத்தில் அவ்வாயுவின் மூலர் கனவளவு என வரையறுக்கப்படும்.
RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank