Please Login to view full dashboard.

சூழலமைப்பும் வட்டங்களும்

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 05:57am

சூழலமைப்பு

வளிமண்டலத்தின் அமைப்பு

கூறு கனவளவு
N2 78.08%
O2 20.99%
Ar 0.94%
CO2 0.03%
  • சிறிய அளவுகளில் Ne, He, CH4, Kr, H2 ஆகியனவும் மாறுபடும் சிறிய அளவுகளில் மாசாக்கிகள் NH3, SO2, CO, NO2, O3 , H2S  போன்றவையும் காணப்படும். வளிமண்டலத்தில் 4% வரையில் காணப்படும் நீராவி எங்கும் சீராக வியாபித்திருப்பதில்லை (நேரத்துக்கு நேரம் மாறுபடலாம்). ஆனால் சமுத்திரங்களுக்கு அண்மையிலும் , நீர்நிலைகளுக்கு அண்மையிலும் செறிவுற்றிருக்கும்.
  • வளிமண்டலத்தில் N2  இன் அளவு உயர்வானது. ஏனெனில் அதில் காணப்படும் வன்மையான Nபிணைப்பினால் அவை சடத்துவத் தன்மை உடையதாக உள்ளது.O2 இன் தாக்குதிறன் Nவை விட உயர்வு.
  • O2 உள்ளதால் வளிமண்டலம் உயிர்ப்பானதாகக் காணப்படுவதோடு உயிரினங்கள் நிலைத்திருக்கவும் உதவும்.
  • H2O ,COஎன்பன ஒளித்தொகுப்பின் பிரதான மூலப்பொருள்களாகும்.

நீர் கோளத்தின் அமைப்பு

• புவியின் 70% மேற்பரப்பு நீரினால் மூடப்பட்டுள்ளது.

screenshot-17

மூலகங்களின் அமைப்பு

மூலகம் புவி ஓட்டின் % அமைப்பு முழு பூமியின் % அமைப்பு
ஒட்சிசன் (O) 46.71 % 29.3 %
சிலிக்கன் (Si) 27.60 % 14.9 %
அலுமினியம் (Al) 8.07 % 2.4%
இரும்பு (Fe) 5.05 % 36.9 %
கல்சியம் (Ca) 3.65 % 3.0%
சோடியம் (Na) 2.75 % 0.6 %
பொற்றாசியம் (K) 2.58 %
மக்னீசியம் (Mg) 2.08 % 7.4 %
ஏனையவை 1.14 % 1.0 %

பிரதான வட்டங்கள்

காபன் வட்டம்

screenshot-18

  • காபனானது சூழற்தொகுதியை சென்றடைவதற்கு ஒரேயொரு வழி ஒளித்தொகுப்பாகும்.
  • விலங்குகள் அவற்றின் உணவின் மூலமே காபனை உள்ளெடுக்கும்.
  • பிரிகையாக்கிகள் இறந்த உயிரினங்களை (உக்கல்களை) சமிபாடடையச் செய்வதன் மூலம் பெறுகின்றன.
  • எல்லா உயிரினங்களும் காபனை வளிக்கு காபனீரொட்சைட்டு வடிவத்தில் சுவாசத்தின் மூலம் கொடுக்கின்றன.
  • பிரிகையாக்கிகள் இல்லாத இடங்களில் தாவரங்களோ அல்லது விலங்குகளோ இறக்கும் போது (உ-ம் ஆழமான சமுத்திரம்) அவற்றில் காணப்படும் காபன் மில்லியன் ஆண்டுகளுக்கு பின் உயிர்சுவட்டு எரிபொருளாக மாறுகின்றது.
  • உயிர்சுவட்டு எரிபொருட்கள் எரிக்கப்படும்பொழுது அவற்றிலிருந்து காபன் வெளிவிடப்படுகின்றது.
  • நுண்ணுயிர்கள் இவ்வட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் அவை விரைவாக இறந்தழிந்த பதார்த்தங்களிலிருந்து காபன் வளிமண்டலத்தை அடைவதற்கு வழிவகுக்கின்றன.

ஒட்சிசன் வட்டம்

screenshot-19

  • வளிமண்டல ஒட்சிசன் எரிதல் (இரசாயன / உயிரியல்) , சுவாசம் ஆகியவற்றால் வளியிலிருந்து அகற்றப்படுகின்றது.
  • ஒளித்தொகுப்பின் போது CO2 உபயோகிக்கப்பட்டு O2 வளிக்கு சேர்க்கப்படுகின்றது.
  • பெரும்பாலான ஒட்சிசன் புவி ஓட்டின் மென்மூடியில் ஒட்சைட்டுக் கனியங்களாக சேகரிக்கப்பட்டுள்ள அதேவேளை பாறைகளுடன் பிணைந்துள்ளதாய் பாவனைக்கு உகந்ததாகக் காணப்படுவதில்லை.
  • பெரும்பாலான ஒட்சிசன் ஒளித்தொகுப்பின் மூலம் கிடைக்கப் பெறுவதுடன் சிறிதளவு ஒட்சிசனானது சூரியஒளி , நீரை பகுப்படையச் செய்வதனால் வளிமண்டலத்தில் உருவாக்கப்படுகின்றது.

 நைதரசன் வட்டம்

screenshot-20

 

  • வளிமண்டல நைதரசன் பக்றீரியாக்களால் பதிக்கப்படுகின்றது.சில பக்றீரியாக்கள் சுயாதீனமாக மண்ணினுள் வசிக்கின்றன. (உதாரணம் : அசற்றோபக்ரர்) றைசோபியம் (Rhizobium) அவரைக் குடும்பத் தாவரங்களின்(leguminous plants) வேர்க்கணுக்களில் காணப்படுகின்றன.
  • வளிமண்டல நைதரசன் முதலில் அமோனியாவாக மாற்றப்படும்.
  • பின் முறையே நைத்திரைற்று நைத்திரேற்றாக மாற்றப்படுகின்றன. தாவரங்களால் NO3¯ அகத்துறிஞ்சப்பட்டு , புரதம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
  • தாவரப் புரதத்திலுள்ள நைதரசன் விலங்குகளுக்கு உணவுச் சங்கிலியினூடாக கடத்தப்படுகின்றது.
  • உயிரினங்கள் இறக்கும் பொழுது நைதரசன் மண்ணுக்குள் விடப்படும். நுண்ணுயிர்களின் தொழிற்பாட்டால் , அமோனியம் சேர்வைகளாக மீள விடப்படுகின்றது. விலங்குகளில் மேலதிக அமைனோ அமிலம் ஈரலில் அமீனகற்றப்பட்டு யூரியா, யூரிக்கமிலம் போன்ற பதார்த்தங்களாக மாற்றப்பட்டு கழிவகற்றலின் போது மண்ணுக்குள் விடப்படுகின்றது.
  • நைதரசனேற்றும் பற்றீரியாக்களால் அமோனியம் சேர்வைகள் நைத்திரேற்றுக்களாக மாற்றப்படுகின்றன. நைத்திரோசோமானஸ் பக்றீரியாக்களால் அமோனியம் சேர்வைகள் முதலில் நைத்திறைற்றுக்களாக மாற்றப்பட்டு பின் நைத்திரோபக்ரரால் நைத்திரேற்றாக மாற்றப்படும்.
  • நைதரசனிறக்கும் பக்றீரியாக்களால் நைத்திரேற்றுக்கள் வளிமண்டல நைதரசனாக மாற்றப்படுகிறது. உதாரணம் :-  சூடோமோனஸ் , தயோபசிலசு.

நீர் வட்டம்

screenshot-21

  • வளிமண்டலத்தினதும் நீர் மண்டலத்தினதும் பூமியின் மேற்பரப்பினதும் , சிறப்பு அமைப்பு புவி நிலைபேறடைவதற்கான சூழற் சமநிலைக்கு அவசியம் இச்சமநிலை பாதிக்கப்பட்டால் பின்வரும் பிரச்சினைகள் உருவாகும்.
  1. மனிதனின் உடல் நலத்தைப் பாதிக்கும் விளைவுகள்.
  2. தாவரங்கள் பாதிக்கப்படல். அதனால் வளர்ச்சி தடைப்படல்.
  3. சுண்ணாம்பு கட்டடங்கள் , உலோகக் கட்டமைப்புகள் பழுதடைதல்.
  4. உவர்திறன் / காரத்திறன் அதிகரித்தல்.
  5. பாறைகள் சிதைவடைதல்.
  6. காலநிலை மாற்றங்கள் (வறட்சி / வெள்ளப்பெருக்கு உண்டாதல்)
RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank