எளிய மின்கலத்தின் வரிப்படம் IUPAC முறையில் வரையப்படுமாயின் வலது பக்கத்தில் தாழ்த்தல் அழுத்தம் கூடிய மின்வாயும் (கதோட்டு), இடது பக்கத்தில் தாழ்த்தல் அழுத்தம் குறைந்த மின்வாயும் (அனோட்டு) வரையப்படல் வேண்டும்.
கரைசலின் ஏற்றச்சமநிலையை பேணும் பொருட்டு உப்புப்பாலம் பயன்படுத்தப்படும்.
உப்புப்பாலத்தை தாயாரிப்பதற்கு செறிந்த KNO3, செறிந்த NaNO3, செறிந்த NH4NO3, செறிந்த NaCl களில் தோய்த்த வடிதாள்கள் பயன்படுத்தப்படும்.
மின்கலம் தொழிற்படும் போது தாழ்த்தல் அழுத்தம் கூடிய மின்வாயில் தாழ்த்தல் தாக்கமும் தாழ்த்தல் அழுத்தம் குறைந்த மின்வாயில் ஒட்சியேற்றல் தாக்கமும் நிகழும்.
இம்மின்கலம் தொழிற்படும் போது வெளிச்சுற்றில் Zn மின்வாயிலிருந்து ஐதரசன் மின்வாயை நோக்கி en கள் பாயும். எனவே நியம ஐதரசன் மின்வாயுடன் ஒப்பிடும் போது நியம Zn மின்வாயில் en செறிவு அதிகம்.
உப்புப்பாலத்தின் பிரயோகங்கள் :
மின்கலத்தின் மின் நடுநிலையை பேணுதல்.
அனோட்டு கதோட்டை இணைப்பதன் மூலம் மின்சுற்றை பூர்த்தி செய்தல்.
கலத்தின் மின்னியக்கவிசை
மின்னோட்டம் கலத்தின் ஊடாகப் பாயாத போது இரண்டு மின்வாய்களுக்கிடையிலான அழுத்த வித்தியாசமானது மின்னியக்க விசை என வரையறுக்கப்படும்.
மின்னியக்க விசையைப் பாதிக்கும் காரணிகளாவன; வெப்பநிலை, மின்பகுபொருளின் செறிவு, மின்வாயின் தன்மை, மின்பகுபொருளின் தன்மை என்பனவாகும்.
இது மின்வாய்களுக்கிடையிலான தூரம், மின்வாய்களின் மேற்பரப்பு என்பவற்றில் தங்கியிருப்பதில்லை.
கலத்தின் மின்னியக்கவிசை எப்போதும் நேர் பெறுமானமாக அமைய வேண்டும்.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்