தொகுதியொன்றின் எந்திரப்பி எனப்படுவது தொகுதியின் எழுமாறான தன்மை பற்றிய அளவீடாகும்.
எந்திரப்பி ஓர் நிலைத் தொழிற்பாடாகும் (State function). அது தொகுதியின் ஆரம்ப இறுதி சந்தர்ப்பங்களின் மீது தங்கியிருக்கும். மாற்றம் நடைபெறும் படிமுறையில் தங்கியிருப்பதில்லை.
எந்திரப்பி ஆனது இரசாயன , பௌதீக மாற்றத்தைப் பாதிக்கும் காரணிகளில் ஒன்றாகும்.
தனிமையாக்கிய தொகுதியொன்றில் நடைபெறும் சுயமான மாற்றம் எந்திரப்பி அதிகரிப்புடன் நடைபெறும்.
குறித்த ஒரு தொகுதியின் எந்திரப்பி மாற்றம் , நிலைத்தொழிற்பாடாகையால் எந்திரப்பி வித்தியாசம் இறுதி எந்திரப்பி பெறுமானத்திலிருந்து ஆரம்ப எந்திரப்பி பெறுமானத்தைக் கழிப்பதன் மூலம் துணியப்படலாம்.
ΔS = Sஇறுதி – Sஆரம்பம்
இரசாயன தாக்கம் ஒன்றிற்காக,
ΔS = Sவிளைவு – Sதாக்கி
இவ் வித்தியாசத்தை நியம நிபந்தனைகளின் கீழ் அளக்கப்படும் போது,
ΔS = Sθவிளைவு – Sθதாக்கி
மாற்றமொன்றுடன் தொடர்புடைய ΔH , ΔS ஆகியவற்றின் மொத்த செல்வாக்கு ΔG எனும் கிப்ஸ் சக்தி வித்தியாசத்தின் மூலம் தரப்படும். மாறா வெப்பநிலை (T)யில் இவற்றுக்கிடையிலான தொடர்பு பின்வருமாறு:
ΔG = ΔH – TΔS
மாறா எந்திரப்பி தொகுதியொன்றின் (ΔS = 0) சுயாதீனத்தன்மை ΔH மூலம் தீர்மானிக்கப்படும். மாறா வெப்ப உள்ளுறையின் கீழ் (ΔH = 0) நடைபெறும் மாற்றமொன்றின் சுயாதீனத் தன்மை ΔS மூலம் தீர்மானிக்கப்படும்.
போர்ன் ஏபர் சக்கரம் (born haber cycle)
அயன் சேர்வையொன்றின் சாலக வெப்பவுள்ளுறையை காண்பதற்காக உருவாக்கியுள்ள வெப்ப இரசாயன சக்கரம் போர்ன் ஏபர் சக்கரம் எனப்படும்.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்