Please Login to view full dashboard.

தனியுடைமை வணிகம்

Author : Admin

6  
Topic updated on 02/12/2019 12:33pm

தனியுடைமை வணிகம் Please Login to view the Question Please Login to view the Question Please Login to view the Question

  • தனி ஒரு நபரால் மூலதனமிட்டு முகாமைத்துவ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இலாப நட்ட விளைவுகளும் குறித்த நபரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நிறுவன வடிவம்.
  • இவை உற்பத்தி, வர்த்தகம், சேவைப்பணிகளில் ஈடுபட முடியும் ஆனால் வங்கி, காப்புறுதி, நிதிப்பணிகளில் ஈடுபட முடியாது ஏனெனில் சட்ட ஆளுமை அற்றவை மற்றும் நட்டப்பொறுப்பு வரையறுக்கப்படாதவை.
  • இந்நிறுவனங்களின் பெயரானது தனி வியாபாரி சார்ந்த பெயரை குறிப்பிடுவதற்காக அமைந்திருக்கும்.

தனி வியாபாரத்தின் பதிவு

  • தனி வியாபார நிறுவனமானது அதன் உடமையாளர் சார்ந்த பெயரை நிறுவனப்பெயராகக் கொண்டிருக்குமாயின் பதிவு சட்டப்படி கட்டாயமில்லை.
  • மாறாக தனி வியாபார நிறுவனப் பெயரானது
    பொதுக்கருத்தை தரக்கூடிய பொதுப்பெயரைக் கொண்டிருக்குமாயின் பதிவு சட்டப்படி கட்டாயமானதாகும்.
  • EG –HAPPY, LUCKY , GOODY FOODY
  • இலங்கையில் தனி வியாபார நிறுவனங்கள் 1918 (06) 149 ம் பிரிவின் படி வியாபாரப் பெயர் பதிவு கட்டளை சட்டத்தின் படி கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் வியாபாரப் பெயர்கள் பதிவாளரிடத்தில் பதிவு செய்யப்படும்.
  • இப் பதிவின் மூலம் நிறுவனம் சட்டரீதியான அங்கீகாரத்தினை பெற முடியும்.

தனியுடைமை வணிகத்தின் அடிப்படை பண்புகள்

  • சட்ட ஆளுமை இல்லை
  • வரையறுக்கப்படாத பொறுப்பு
  • சிற்றளவு மூலனத்தன்மை
  • நீடித்த வாழ்வின்மை

சட்ட ஆளுமை – ஒரு 18 வயதுக்கு மேற்பட்ட இயற்கை மனிதனுக்கு இருக்கக்கூடிய சட்ட ரீதீயான தனிமனித அங்கீகாரமானது ஒரு நிறுவனத்துக்கு காணப்படுவது ஆகும்.

உடையவை – கம்பனி , கூட்டுத்தாபனம் , கூட்டுறவு. இந் நிறுவனங்கள் நிறுவனப்பெயரைப் பயன்படுத்தி சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட, வழக்குத்தாக்கல் செய்ய , வங்கிக் கணக்கை ஆரம்பிக்க , சொத்துக்களை வாங்க , வரி செலுத்த முடியும்.

அற்றவை – தனி வியாபாரம் , பங்குடைமை , அரச திணைக்களம். இந் நிறுவனங்கள் நிறுவனப்பெயரைப் பயன்படுத்தி சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.

நட்டப்பொறுப்பு – ஒரு தொழில் நிறுவனமானது நட்டமடைகின்ற போது அந்நட்டத்தில் உரிமையாளர் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நட்டத்தொகையின் அளவானது முன் கூட்டியே ஏதேனும் ஒரு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருக்குமாயின் அது வரையறுக்கப்பட்ட பொறுப்பு எனப்படும்.

வரையறுக்கப்பட்டவை – கம்பனி , கூட்டுத்தாபனம் , கூட்டுறவு. இதனால் இந்நிறுவனங்களின் பெயருடன் ‘’ Limited ‘’ எனும் பதம் இணைக்கப்பட்டிருக்கும்.

வரையறுக்கப்படாதவை – தனி வியாபாரம் , பங்குடைமை. இந்நிறுவனங்கள் நட்டமடையும் போது அதன் உடமையாளர்கள் தமது மூலதனத்தை இழப்பதுடன் மேலதிக நட்டத்தொகையை தீர்ப்பதற்காக சொந்த சொத்துக்களையும் இழக்க வேண்டிய அபாய நிலைமை ஏற்படும்.

தனியுடைமை வணிகத்தின் நன்மைகள்

  • இலாபம் தனி ஒருவரையே சாரும்.
  • சட்டக்கட்டுப்பாடுகள் மிகக் குறைவு
  • குறைந்த மூலதனத்துடன் ஆரம்பிக்கலாம்.
  • குறைந்த உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கலாம்.
  • விரைவாக தீர்மானம் எடுக்கலாம்.
  • வியாபார இரகசியங்களை பாதுகாக்கலாம்.

தீமைகள்

  • சட்ட ஆளுமை அற்றது.
  • வரையறுக்கப்படாத பொறுப்பு
  • நீடித்த ஆயுள் இன்மை
  • சட்டப்பாதுகாப்பு குறைவு
  • மூலதனப்பற்றாக்குறை காணப்படும்.
RATE CONTENT 0, 0
QBANK (6 QUESTIONS)

பின்வரும் வணிக நிறுவகங்களுள் எது 1918 ஆம் ஆண்டின் வணிகப் பெயர்க் கட்டளைச் சட்டத்தின் தாக்கத்திற்கு உட்படும்?

Review Topic
QID: 19372
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவன பல்வேறு வணிகங்களின் நன்மைகள் சிலவாகும்.
A – இலகுவில் ஆரம்பிக்க முடிதல்
B – பெரியளவு மூலதனத்தைத் திரட்டிக் கொள்ள முடிதல்
C – தீர்மானம் எடுத்தலில் சுயாதீனம் காணப்படல்
D – வணிகத்தை முகாமை செய்வதற்கு திறமையானவர்களை நியமித்துக்கொள்ள முடிதல்
E – வணிகத்தைக் கலைப்பது இலகுவாயிருத்தல்
F – பொறுப்புக்களைக் கூடிய எண்ணிக்கையானோரிடையே பகிர்ந்துகொள்ள முடிதல்.
இவற்றுள் தனியுரிமை வணிகமொன்றின் நன்மைகளை மட்டும் உள்ளடக்கிய தொகுதியைத் தெரிவுசெய்க.

Review Topic
QID: 19391
Hide Comments(0)

Leave a Reply

தனிவியாபாரி வியாபாரமொன்றை நிறுவுவதனால் பெறக்கூடிய பிரதான நன்மையாவது?

Review Topic
QID: 19104
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் வணிக நிறுவகங்களுள் எது 1918 ஆம் ஆண்டின் வணிகப் பெயர்க் கட்டளைச் சட்டத்தின் தாக்கத்திற்கு உட்படும்?

Review Topic
QID: 19372

பின்வருவன பல்வேறு வணிகங்களின் நன்மைகள் சிலவாகும்.
A – இலகுவில் ஆரம்பிக்க முடிதல்
B – பெரியளவு மூலதனத்தைத் திரட்டிக் கொள்ள முடிதல்
C – தீர்மானம் எடுத்தலில் சுயாதீனம் காணப்படல்
D – வணிகத்தை முகாமை செய்வதற்கு திறமையானவர்களை நியமித்துக்கொள்ள முடிதல்
E – வணிகத்தைக் கலைப்பது இலகுவாயிருத்தல்
F – பொறுப்புக்களைக் கூடிய எண்ணிக்கையானோரிடையே பகிர்ந்துகொள்ள முடிதல்.
இவற்றுள் தனியுரிமை வணிகமொன்றின் நன்மைகளை மட்டும் உள்ளடக்கிய தொகுதியைத் தெரிவுசெய்க.

Review Topic
QID: 19391

தனிவியாபாரி வியாபாரமொன்றை நிறுவுவதனால் பெறக்கூடிய பிரதான நன்மையாவது?

Review Topic
QID: 19104
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank