யங்கின்மட்டை பரிசோதனை ரீதியாக துணிதல்
படத்தில் காட்டப்பட்டது போல உபகரணம் ஒழுங்கு செய்யப்பட்டு வௌ;வேறு சுமைகளை இடுவதன் மூலமான நீட்சியைப் பெற்று நீட்சி எதிர் சுமை வரைபு வரையப்படும்.
வரைபு உற்பத்திக் கூடாக செல்லுமாயின் ஊக்கின் விதி உண்மை என வாய்ப்புப் பார்க்கலாம்.
படித்திறன் m = Δe/f
யங்கின் மட்டு = Fl/ Ae
E = 4l/ πd2[e/ΔF]
E = 4l/ πd2m
கம்பியின் ஆரம்ப நீளம் (l) மீற்றர் கோலாலும். விட்டம் (d நுண்மானி திருகுகணிச்சியாலும் அளவிடப்படும்.
வரைபிலிருந்து படித்திறனைப் பெற்று சமன்பாட்டில் பிரதியிட்டு யங்கின்மட்டு E ஐத் துணியலாம்
Note
ஒரே நீளமும் ஒரே பதார்த்தத்தாலான இரு சர்வசமனான கம்பிகள் அருகருகே தொங்கவிடப்படுகின்றன. இதனால் வளை கீழிறங்குவதால் ஏற்படும் வழுவும் வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் வழுவையும் ஈடுசெய்யலாம்.
நீட்சியை திருத்தமாக அளவிட வேணியர் அளவிடையையும் ஏற்படும் நீட்சியை அளக்கக்கூடிய அளவுக்கு கூட்ட இங்கு பயன்படுத்தப்படும் கம்பிகள் நீளமாகவும், மெல்லியனவாகவும் தெரிவு செய்யப்படும்.
சுமை ஏற்றும் போதும் இறக்கும் போதுமாக 2 தடவைகள் நீட்சிக்கு வாசிப்பு எடுக்கப்பட்டு மீள்தன்மை மீறப்பட வில்லை என்பது உறுதி செய்யப்படும்.
நுண்மானி திருகுகணிச்சியை பயன்படுத்தி கம்பியின் விட்டம் அளவிடும்போது ஒன்றுக்கொன்று செங்குத்தாக வெவ்வே று இடங்களில் வாசிப்பு பெறப்பட்டு சராசரி துணியப்படும்.