Please Login to view full dashboard.

வெப்பச் சமனிலையும் வெப்பமானிகளும்

Author : Admin

1  
Topic updated on 02/14/2019 05:34am

வெப்பச் சமனிலை

  • சூடான உடலொன்றும், குளிரான உடலொன்றும் வெப்பத் தொடுகையில் இருக்கும் போது, சூடான உடலில் இருந்து குளிரான உடலை நோக்கி வெப்பப் பாய்ச்சல் நிகழும் ஒரு நிலையில் தேறிய வெப்பப் பாய்ச்சல் பூச்சியம் இது வெப்பச் சமனிலை எனப்படும்.

வெப்ப இயக்கவியலின் பூச்சிய விதி

  • உடல் A ஆனது, உடல் B உடனும், உடல் C உடனும் தனித்தனியே வெப்பச் சமநிலையில் இருந்தால் B, C தமக்கிடையே வெப்பச் சமனிலையில் இருக்கும்.

வெப்பமான இயல்பு

  • வெப்பநிலையுடன் மாறும் பௌதிக இயல்பு வெப்பமான இயல்பு எனப்படும்.
  • உதாரணம் : திரவங்களின் கனவளவு, வாயுவொன்றின் கனவளவு

வெப்பநிலை

  • இது உடலொன்றின் சூட்டின் அளவைத் தரும்.
  • வெப்பநிலை என்பது, இரு பொருட்கள் வெப்பத் தொடுகையில் இருக்கும் போது, வெப்பம் எத் திசையில் பாயும் என்பதைத் தீர்மானிப்பதாகும்.

நிலைத்த புள்ளிகள்

(1) கீழ் நிலைத்த புள்ளி (0°C)

  • தூய பனிக்கட்டி நியம அமுக்கத்தில் உருகும் வெப்ப நிலை கீழ் நிலைத்த புள்ளி

(2) மேல் நிலைத்த புள்ளி (100°C)

  • நியம அமுக்கத்தில் கொதி நீராவியின் வெப்பநிலை மேல்நிலைத்த புள்ளி

(3) மும்மைப் புள்ளி

  • தூய பனிக்கட்டி, நீர், நீராவி ஆகிய மூன்றும் சமநிலையில் இருக்கும் வெப்பநிலை மும்மைப்புள்ளி

வெப்பநிலை அளவுத் திட்டங்கள்

(1) செல்சியஸ் அளவுத் திட்டம் (°C)

  • கீழ் நிலைத்த புள்ளி (0°C), மேல்நிலைத்த புள்ளி (100°C) ஆகியன இவ்வளவுத் திட்டத்தின் இரு நிலைத்த புள்ளிகளாகும்.
  • வெப்பநிலையை செல்சியசில் அளப்பதற்கு,
    முதலில் உருகும் பனிக்கட்டியினுள் வெப்பமானியை வைத்து வெப்பமான இயல்பை அளக்க வேண்டும் (X0)
  • அதன் பின், கொதி நீராவியில் வைத்து வெப்பமான இயல்பு அளவிடப்படும் (X100)
  • இறுதியாக அளக்க வேண்டிய வெப்பநிலையில் வைத்து வெப்பமான இயல்பை அளக்க வேண்டும். (Xθ)
    இரண்டு நிலைத்த புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட வெப்பநிலைக்குரிய சமன்பாடு.

  • இச்சமன்பாட்டில் பிரதியிட்டு பெறப்படும் வெப்பநிலை செல்சியசில் இருக்கும்.

(2) கெல்வின் அளவுத் திட்டம்

  • அறிமுறையில் வாயுவொன்றின் கனவளவு பூச்சியமாகும் வெப்பநிலை – 273.15°C ஆகும்.
  • இவ் வெப்பநிலையினை பூச்சியமாகக் கொண்ட வெப்பநிலை அளவுத்திட்டம் கெல்வின் அளவுத் திட்டம் ஆகும்.
  • கெல்வின் வரைவிலக்கணம் : நீரின் மும்மைப் புள்ளியின் வெப்ப இயக்கவியல் வெப்பநிலையின் heat-2 பங்கு.
  • தூய நீரின் மும்மைப் புள்ளியை அடிப்படையாகக் கொண்ட தனி வெப்பநிலை ஆன சமன்பாடு.


X- அளக்க வேண்டிய வெப்பநிலையில் வெப்பமான இயல்பு
Xtr – நீரின் மும்மைப் புள்ளி வெப்பநிலையில் வெப்ப மான இயல்பு

இச்சமன்பாட்டில் பிரதியீட்டு பெறப்படும் வெப்பநிலை கெல்வினில் இருக்கும்.

தனிவெப்ப நிலைக்கும், செல்சியஸ் அளவுத் திட்டத்திற்கும் இடையிலான தொடர்பு
T = θ +273.15

வெப்பமானிகள்

வெப்பமானி வெப்பமான இயல்பு அனுகூலம் பிரதிகூலம்
கண்ணாடி இரச வெப்பமானி இரசத்தின் கனவளவு விரிவு
  • வெப்பநிலையுடன் சீரான விரிவைக் காட்டும்
  • ஒப்பீட்டளவில் திருத்தமானவை
  • ஒப்பீட்டளவில் உணர்திறன் குறைவு
 மாறா கனவளவு வெப்பமானி வாயுவின் அமுக்கம்
  • உணர்திறன் மிக்கவை
  • இவை பருமனில் பெரியவை யாகவும், பாரமானவையாகவும் இருக்கின்றமை
மாறா அமுக்க வெப்பமானி வாயுவின் கனவளவு
  • பரந்த வெப்பநிலை வீச்சுக்கு வாயுக்கள் ஒழுங்காகவும் சீராகவும் விரிகின்றது
  • இவை பருமனில் பெரியவை யாகவும், பாரமானவையாகவும் இருக்கின்றமை
வெப்ப இணை வெப்பமானி வெப்ப மின்னியக்க விசை
  • பெரிய வீச்சமுடையது
  • பரப்பு, புள்ளி போன்றவற்றின் வெப்பநிலைகளை அளவிட சிறந்தது
  • ஒருமுனையை தொடர்ந்து 0°C இல் பேணுவது கடினம்
Pt தடை வெப்பமானி Pt தடையின் விரிவு
  • பரந்த வீச்சமுடையது
  • ஒப்பீட்டளவில் திருத்தம் கூடியது
  • உய்த்தன்பால ஒழுங்கை சமனிலைப்படுத்த வெகுநேரம் எடுக்கும்
  • Pt கம்பி மிகக் குறைந்த நேரத்தில் ஒரு தொட்டியின் வெப்பநிலையை எடுத்துக் கொள்ளமாட்டாது.
வெப்பத் தடையி மின்தடை
  • ஒப்பீட்டளவில் உணர்திறன் கூடியது
  •  திருத்தம் குறைந்தது
RATE CONTENT 5, 1
QBANK (1 QUESTIONS)

குறிப்பிட்ட ஒருவகை மின்னழுத்தியின் வெப்பமூட்டும் கருவியானது அழுத்தியின் உலோகப் பகுதிகளிலிருந்து மைக்காத் தகடுகளினது உபயோகத்தினால் வழக்கமாக வேறாக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மைக்காவானது

(A) ஒரு நல்ல மின்காவலியாகும்

(B) ஒரு நல்ல வெப்பக் காவலியாகும்

(C)ஒரு நல்ல வெப்பக் கடத்தியாகும்

மேற்கூறியவற்றுள்

 

 

Review Topic
QID: 9191
Hide Comments(1)
Mohamed Rifky
Mohamed Rifky
வேறா யூஸ்டின்ஸ் இல்லையா இதனை போன்று

Leave a Reply

குறிப்பிட்ட ஒருவகை மின்னழுத்தியின் வெப்பமூட்டும் கருவியானது அழுத்தியின் உலோகப் பகுதிகளிலிருந்து மைக்காத் தகடுகளினது உபயோகத்தினால் வழக்கமாக வேறாக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மைக்காவானது

(A) ஒரு நல்ல மின்காவலியாகும்

(B) ஒரு நல்ல வெப்பக் காவலியாகும்

(C)ஒரு நல்ல வெப்பக் கடத்தியாகும்

மேற்கூறியவற்றுள்

 

 

Review Topic
QID: 9191
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank