தகைப்பு (σ)
விகாரம் (ε)
தகைப்புற்றிருக்கும் ஒரு பொருளின் பருமனில் அல்லது வடிவில் ஏற்படும் பின்னமாற்றம் விகாரம் எனப்படும். விகாரம் பரிமானம் அலகற்றது.
இழுவைத் தகைப்பு
இழுவிசைக்கு உட்பட்டிருக்கும் பொருளொன்றின் ஒரு சதுர அலகு பரப்புக்கு செங்குத்தாக தாக்கும்விசை இழுவை தகைப்பு எனப்படும்.
இழுவை விகாரம்
இழுவைத் தகைப்புற்றிருக்கும் இழையொன்றின் ஓரலகு நீளத்தில் ஏற்படும் நீட்சி இழுவை விகாரம் எனப்படும்.
விகிதசம எல்லை
மீளியல் இழையில் நீட்சிக்கு விகிதசமனாக விசை அமையக் கூடியவாறு இழையில் பிரயோகிக்கக்கூடிய உயர் தகைப்பு ஆகும்.
மீளியல் எல்லை
தகைப்புற்றிருக்கும் பொருளில் தகைப்பு அகற்றப்பட்டதும் மீண்டும் பழையநிலையை அடையக்கூடியவாறு இழையில் பிரயோகிக்கதக்க உயர் தகைப்பு ஆகும்.
ஊக்கின் விதி
விகிதசம எல்லைக்குட்பட்ட நிலையில் இழை அல்லது சுருளிவில் ஒன்றில் ஏற்படும் நீட்சியானது அதில் பிரயோகிக்கப் படும் சுமைக்கு நேர்விகித சமனாகும்.
F ∞ e
F = ke
இறுதகைப்பு / இறுபுள்ளி
பொருளொன்று உடையாதவாறு இருக்கத்தக்கவாறு அதனில் பிரயோகிக்கப்படக் கூடிய விசையினால் ஏற்படும் உயர் தகைப்பு பொருளின் இறுபுள்ளி அல்லது இறுதகைப்பு ஆகும்.
யங்கின்மட்டு
விகிதசம எல்லைக்குட்பட்ட நிலையில் இழுவைத் தகைப்பிற்கும். இழுவை விகாரத்திற்கும் இடையேயான விகிதம் யங்கின்மட்டு ஆகும்.
யங்கின் மட்டு = இழுவைத் தகைப்பு / இழுவைவிகாரம்
E =( F/A) / ( e/l)
E = Fl/Ae
அலகு-Pa.
ஈர்க்கப்பட்ட இழையில் சேமிக்கப்படும் விகாரச் சக்தி
கம்பி நீட்சியடையும் போதான இடைவிசை=
செய்யப்பட்ட வேலை = இடைவிசை *தூரம்
விகாரச்சக்தி w= ½ ke
ஊக்கின் விதிப்படி F =ke
விகாரச்சக்தி w= ½ ke2
யங்கின் மட்டிலிருந்து
விகாரச்சக்தி =½= EAe2
Al கனவளவில் சேமிக்கப்பட்ட விகாரச்சக்தி = ½ Fe
அலகு கனவளவில் சேமிக்கப்பட்ட சக்தி =½Fe
= ½ × σ × ε
= ½ × தகைப்பு × விகாரம்
வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் விசைக்கான கோவை
F= EAe/l
வெப்பநிலை உயர்வால் ஏற்படும் நீட்சி
F=EA *l 0 * Δθ/ l0
F=EA ∞ Δθ
விசை கோலின் நீளத்தில் தங்காது