மேற்பரப்பிழுவை
திரவமொன்றின் சுயாதீன மேற்பரப்பில் வரையப்பட்ட ஓரலகு நீளமான கற்பனைக் கோட்டுக்கு செங்குத்தாக ஒரு பக்கத்தில் தாக்கும் மேற்பரப்புத் தொடலிவிசை அத்திரவத்தின் மேற்பரப்பிழுவை ஆகும்.
T = F/l
அலகு- Nm-1
T = W/A
அலகு- Jm-2
மேற்பரப்பு இழுவைக்கான காரணம்
திரவ மேற்பரப்பில் உள்ள மூலக்கூறுகளில் கீழ்நோக்கி மட்டுமே கவர்ச்சி விசை தொழிற்படும். எனவே இதன் காரணமாக திரவ மேற்பரப்பில் உள்ள மூலக்கூறுகள் திரவத்தினுள் புக முயற்சிக்கும்.
திரவத்தினுள் உள்ள மூலக்கூறை பொறுத்தமட்டில் எல்லா திசையிலும் கவர்ச்சி விசை தொழிற்படும். எனவே விளையுள் விசை பூச்சியமாகும்.
திரவத்தினுள் உள்ள மூலக்கூறுகளை விட திரவ மேற்பரப்பிலுள்ள மூலக்கூறுகள் அதிக சக்தி உடையன.
ஒருங்கிணையும் விசை
அயலிலுள்ள திரவ மூலக்கூறுகளினால் ஒரு திரவமூலக்கூறின் மேல் தாக்கும் விசை ஒருங்கிணையும் விசை எனப்படும்.
ஒட்டற்பண்பு விசை
திண்ம மேற்பரப்பிலுள்ள மூலக்கூறுகளினால் ஒரு திரவ மூலக்கூறின் மீது தாக்கும்விசை ஒட்டற்பண்பு விசை எனப்படும்.
ஒட்டற்பண்பு விசை > ஒருங்கிணையும் விசை{θ<90°}
திரவம் குழிவுப்பிறையுருவானது திரவம் சுவருடன் ஒட்டிக்கொள்ளும்.
ஒருங்கிணையும் விசை> ஒட்டற்பண்பு விசை{ θ>90° }
திரவம் குவிவுப்பிறையுருவாக இருக்கும். திரவமேற்பரப்பு சுவரிலிருந்து தள்ளப்படும்.
தொடுகைக் கோணம்
திண்ம மேற்பரப்பும், திரவமேற்பரப்பும் சந்திக்கும் புள்ளியில் வரையப்படும்
திண்மத்தொடலி தளத்திற்கும், திரவத் தொடலி தளத்திற்கும் இடைப்பட்ட திரவத்தினூடு அமைந்த கோணம் தொடுகைக் கோணம் எனப்படும்.
தொடுகைக் கோணம் திண்மமேற்பரப்பு திரவத்தின் தன்மையில் தங்கியது.
தூய கண்ணாடிக்கும் தூய நீருக்கும் இடையில் தொடுகைக் கோணம் பூச்சியமாகும்
.
இரசத்திற்கும் கண்ணாடிக்கும் இடையேயான தொடுகைக்கோணம் 140° ஆகும்.
மேற்பரப்பை நனைக்கும் திரவங்களின் தொடுகைகோணம் பூச்சியமாகும்.
சுயாதீன மேற்பரப்பு சக்தி
சமவெப்பு நிபந்தனைக்கமைய திரவமொன்றின் மேற்பரப்பானது மேற்பரப்பிழுவைக்கு எதிராக ஒருசதுர மீற்றரினால் அதிகரிக்கப்படும் போது செய்யப்படும் வேலை சுயாதீன மேற்பரப்பு சக்தி ஆகும்.
σ = W/ A
அலகு – Jm-2
செய்யப்பட்டவேலை =விசை * தூரம்
W = 2LT Δ x
பரப்பு = 2L Δ x
σ = W/A = 2LT Δ x/ 2L Δ x
σ = T
மேற்பரப்பிழுவை = சுயாதீன மேற்பரப்பு சக்தி
வெப்பநிலையானது கூடும்போது மேற்பரப்பு இழுவிசை குறையும்.
மயிர்த்துளைக் குழாயில் திரவ எழுகை
ஓட்டற்பண்பு விசை ஒருங்கிணைவு விசையிலும் உயர்வாக இருக்கும் போது விளையுள் விசையின் நிலைக்குத்து கூறு திரவத்தை மேலே எழச் செய்யும். அவ் நிலைக்குத்து விசை திரவத்தின் நிறைக்கு சமனும் எதிரும் ஆனதும் திரவம் ஏறுவது நிற்கும்.
திரவநிரலின் நிறை = குழாயில் தாக்கும் விசையின் நிலைக்குத்து கூறு
Mg = 2πr TCOSQ
πr2 hpg = 2πr TCOSQ
h = 2TCOSQ/ rpg
தொடுகைக் கோணம் பூச்சியம் ஆயின் = 0
h = 2T/ rpg
h = 2T R/RΡg R-பிறையுருவின் ஆரை
தொடுகைக் கோணம் கூர்ங்கோணமாக உள்ள திரவங்கள் மயிர்த்துளைக் குழாய்களில் மேலே ஏறும். தொடுகைக் கோணம் விரிகோணமாக உடைய திரவங்கள் கீழ் நோக்கி இறங்கும்.
மயிர்த்துளை எழுகை வளிமண்டல அமுக்கத்தில் தங்காது.
கோளப்பிறையுருவுக்கு குறுக்கேயான அமுக்கவித்தியாசம்
திரவத்தினுள் உள்ள குமிழினுள் மிகை அமுக்கம்
அரைக்கோள குமிழியின் சமனிலைக்கு உள் அமுக்கம் (P1) ஆலான விசை = வெளி அமுக்கம் (P2) ஆலான விசை + மேற்பரப்பிழுவை
PA – PB = 2T/r
PC – PD = 2T/r
வளியில் குமிழினுள் மிகை அமுக்கம்
அரைக்கோள குமிழியின் சமனிலைக்கு
உள் அமுக்கம் (P1) ஆலான விசை = வெளி அமுக்கம் (P2) ஆலான விசை+ மேற்பரப்பிழுவை
புவசேயின் சூத்திரத்தை உபயோகித்து திரவம் ஒன்றின் பிசுக்குமைக் குணகம் துணிதல்
தரப்பட்ட உருவமைப்பை ஒழுங்கு செய்து உறுதி நிலை வ யில் அளவுச் சாடியில் சேகரிக்கப்படும் திரவத்தின் ஏ கனவளவு துணியப்படும்
புவசேயின் சூத்திரப்படி,
ஆரம்பத்தில் மயிர்த்துளைக் குழாயை முதலில் யே NaOH, HCL நீரினால் கழுவி பின் பின்வரும் அமைப்பை அமைத்து அளவுச்சாடியினுள் குறித்த நேரம் போதுமான அளவு நீரைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அருவிக் கோட்டுப் பாய்ச்சலை பேணுவதற்காக குழாயினூடு திரவம் மெதுவாகப் பாய வேண்டும். ஏனெனில் அருவிக் கோட்டு பாய்ச்சலுக்கு மாத்திரமே புவசேயின் சமன்பாடு உண்மை.
மயிர்த்துளைக் குழாயினுள் இரசநிரலை புகுத்தி உள் ஆரை துணியப்படும் பின் இரசத்தின் நிறை முத்துலாத் தராசினால் அறியப்பட்டு ஆரை துணியப்படும்.
r4 பெறுமானம் மிகச்சிறியது என்பதால் திருத்தமாக அளவிடல் வேண்டும்.
ஸ்ரோக்கின் விதியை உபயோகித்து இருதிரவங்களின் பிசுக்குமையை ஒப்பிடல்
உயரமான பாத்திரத்தில் பிசுக்குமைக் குணகம் ஒப்பிடவேண்டிய திரவத்தை எடுத்து சிறிய உருக்கு கோளம் மேலிருந்து கீழே விழ விடப்படும்.A யிலிருந்து B க்கு செல்ல எடுக்கும் நேரம் t1 அளக்கப்படும்.
இரண்டாவது திரவத்திற்கு
Note :
* உருக்குக் கோளத்தின் ஆரை மிகச்சிறியதாக இருத்தல்வேண்டும். காரணம் ஆரை சிறிதாக இருக்கும்போதே முடிவு வேகம் சிறிதாக இருக்கும்.
*முடிவுவேகம் சிறிதாக இருக்கும்போதே ஸ்ரோக்கின் விதி உண்மையாகும்.
*இம்முறை பிசுக்குமை கூடிய திரவங்களுக்கும் அதிக அளவில் பெறக்கூடிய திரவங்களுக்குமே உகந்தது.
நுணுக்காட்டி வழுக்கியைப் பயன்படுத்தி திரவம் ஒன்றின் மேற்பரப்பு இழுவையை துணிதல்.
தராசின் ஒருபுயத்தில் இருந்து ஒருநுணுக்குக்காட்டி வழுக்கி அதன் கீழ்ஓரம் கிடையாக இருக்குமாறு தொங்க விடப்படும்.
மறுபுயத்தில் நிறைப்படிகள் இடப்பட்டு நிறைப்படிகள் இடப்பட்டு தராசு சமனிலைப்படுத்தப்படும்.
வழுக்கியின் கீழ் ஓரத்தை மட்டுமட்டாக தொடுமாறு ஒரு முகவையில் உள்ள திரவம் பிடிக்கப்படும்.
மீண்டும் தராசு சமனிலை அடையும் வகையில் தராசுத் தட்டில் மேலதிக திணிவுகள் வைக்கப்படும்.
வழுக்கியின் மீது தொழிற்படும் =சுமை
பரப்பிழுவை
2(a + b) T = mg
T = mg/ 2(a + b)
T = abhpg/ 2(a + b)
நீளத்தை வேணியர் இடுக்கிமானியினாலும்ää தடிப்பை நுண்மானித் திருகு கணிச்சியாலும் அளக்கப்படும்.
பரிசோதனையின் ஆரம்பத்தில் நுணுக்குக்காட்டி வழுக்கியை எடுத்து முதலில் NaOH ஆலும் HCL கரைசலாலும்ää பின்னர் நீரிலும் நன்கு கழுவிச் சுத்திக்கரித்தல் வேண்டும்.
நீரின் பரப்பிழுவை வெப்பநிலையுடன் மாறும். எனவே வெப்பநிலையை குறித்துக் கொள்ளப்பட வேண்டும்.
மயிர்த்துளைக்குழாய் எழுகை முறையால் நீரின் பரப்பிழுவையை துணிதல்
மயிர்த்துளைக் குழாய் முதலில் NaOH கரைசல் HCL கரைசல் பின் நீரினால் கழுவி பின்னர் உலர்த்திக் கொள்க.
நீரைக் கொண்ட முகவையின் உயரத்தை மாற்றத்தக்க விதத்தில் வாங்கியை வடிவமைக்க வேண்டும்.
பின் நகரும் நுணுக்குக்காட்டியை பிறையுருவின் அடிக்கு குவியப்படுத்தி வாசிப்பு பெறப்படும்.
. பின்னர் நீருடன் கூடிய முகவை அகற்றப்பட்டு நுணுக்குக் காட்டியை ஊசியின் கீழ் நுனிக்கு குவியபடுத்தி வாசிப்பு பெறப்படும்.
மயிர்த்துளை ஏற்றம் H = [H1 – H2
மயிர்த்துளையின் இடைவிட்டம் d = [x2 – x1] + [y2 – y1]
மயிர்த்துளை குழாயின் ஆரை = d/2
ஊசியை நீர்மட்டத்தை குறித்துக்கொள்ள பயன்படும்.
மயிர்த்துளைக்கு குழாய் எழுகை வளிமண்டல அமுக்கத்தில் தங்கியில்லை.
வெப்பநிலையுடன் மேற்பரப்பு இழுவிசை மாறுபடுவதால் மயிர்த்துளை எழுகை வெப்பநிலையுடன் மாறுபடும்.
யோகரின் முறையால் திரவத்தின் மேற்பரப்பு இழுவையை துணிதல்
பரப்பு இழுவையை அளக்க வேண்டிய திரவத்தின் பரப்பிழுவை வு உம்ää அடர்த்தி – P
மெலிமானி உள்ள மண்ணெண்யெண் அடர்த்தி – P2
திரவ நிரல் வித்தியாசம் (மெலிமானி) – h1
திரவ மட்டத்திலிருந்து மயிர்த்துளைக் குழாயின் அந்தம் வரையான ஆழம் – h2 வளிமண்டல அமுக்கம் – π
குமிழினுள் அமுக்கம் – (P1) = π 10 h1p1g
குமிழுக்கு வெளியே அமுக்கம் – P2= π 10 h2p2g
மேலதிக அமுக்கம் = P1 – P2
= (h1p1g – h2P2)
=2T/r(h1p1 – h2p2)g
=T=gr (h1p1 – h2p2)/2
மெலிமானியில் போதுமான அளவு மண்ணெண்ணெய் (P1) இடுக.
உபகரணத்தில் உள்ள மயிர்த்துளைக் குழாய் நிலைக்குத்தாக அமையுமாறு தாங்கியொன்றின் மூலம் இணைக்க.
பரப்பு இழுவையைத் துணிய வேண்டிய திரவத்தைச் சிறிய முகவையில் இட்டு மயிர்த்துளைக் குழாயின் கீழ் அந்தம் அத்திரவத்தினுள் அமிழும் வகையில் அமிழ்த்துக.
பெரிய குடுவையினுள் நீர் பாயுமாறு T1 வாயிலை திறக்க பின் குடுவையினுள் உள்ள வளியின் அமுக்கம் படிப்படியாக அதிகரித்து மயிர்த்துளைக் குழாயின் திரவத்தில் அமிழ்ந்துள்ள அந்தத்தில் வளிக் குமிழியொன்று உருவாகிää மெதுவாக வளிக்குமிழி வெளியேறும்.
மெலிமானியின் 2 திரவப் பிறையுருவுக்கும் இடையிலான உயர வித்தியாசம் பெற யு புயத்தின் திரவப் பிறையுருவை நகரும் நுணுக்குக் காட்டியின் மூலம் அவதானித்தல் அளவிடையைப் பெறல்.
B புயத்தின் திரவப் பிறையுருவையும் நகரும் நுணுக்குக் காட்டியின் மூலம் அவதானித்து அளவிடையைப் பெறல்.
h1 = (H4 – H3)
h2 = (H2 – H1)
d = [(y1 – y2) + (x1 – x2)]/2