PS-U12- 173

Author : Admin

Topic updated on 07/15/2017 10:31am

குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளின் சட்டத்துறைகளின் சிறப்புப் பண்புகளாவன: – பிழையான கூற்று
A – பிரித்தானிய அரசாங்க முறையில் பாராளுமன்றம் என அழைக்கப்படும் சட்டத்துறை சட்டவாக்கத்தில் ஒத்த அதிகாரங்களைப் பெற்ற இரு மன்றுகளைக் கொண்டுள்ளது.
B – காங்கிரஸ் என்றழைக்கப்படும் அமெரிக்கச் சட்டத் துறை இரு மன்ற முறையினதாக இருப்பதோடு அவற்றுள் முதல் மன்றமான மக்கள் பிரதிநிதிகள் சபையை விட இரண்டாம் மன்றமான செனெற் சபை அதிக பலம் வாய்ந்ததாகும்.
C – சமஷ்டிப் பேரவை என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்துச் சட்டத்துறை இருமன்ற முறையினதாக இருப்பதோடு அவ்விரு மன்றுகளினதும் உறுப்பினர்கள் ஐந்து வருடப் பதவிக்காலத்துக்கு மக்களாலும் கன்ரன்களாலும் தெரிவு செய்யப்படுகின்றனர்.
D – தற்போதைய பிரான்சிய அரசாங்க முறையில் பாராளுமன்றம் என்றழைக்கப்படும் சட்டத்துறை இருமன்ற முறையினதாக இருப்பதோடு அவை இரண்டும் தன்னிச்சையான முறையில் ஜனாதிபதியினால் எச்சந்தர்ப்பத்திலும் கலைக்கப்படலாம்.
E – இந்திய மத்திய அரசாங்கத்தின் சட்டத்துறை இரு மன்ற முறையினதாக இருப்பதோடு அவற்றுள் இரண்டாம் மன்றமான ராஜ்ய சபை அதிகாரங்களிலும் பணிகளிலும் பெரும்பாலும் பெரிய பிரித்தானிய பிரபுக்கள் சபையை ஒத்ததாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply