ஹோல் விளைவுபற்றிய பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)ஹோல் வோல்ற்றளவின் குறி (நேர் அல்லது மறை) உலோகத்தினுள்ளே உள்ள மின்னோட்டங் காவிகளின் குறியிலே (நேர் அல்லது மறை) தங்கியிருப்பதில்லை.
(B) காந்தப் புலத்தின் திசை மின்னோட்டத்தின் திசைக்குச் சமாந்தரமாக இருக்கும்போது ஹோல் வோல்ற்றளவு பிறப்பிக்கப்படுவதில்லை.
(C)ஹோல் விளைவானது காந்தப் புலம் ஒன்றில் இயங்கும் மின்னேற்றம் ஒன்றின் மீது தாக்கும் விசையின் பயனாக ஒரு பேறாகும்.
மேலுள்ள கூற்றுக்களில்?