நிலைக்குத்து அச்சுகளை மையமாகக் கொண்டுள்ள A, B, C என்னும் சர்வ சமமான வட்டத் தடங்களின் மூன்று ஒழுங்கமைப்புகளில் உள்ள வட்டத்தடங்கள் உருவில் காட்டியவாறு உள்ள திசைகளில் ஒரே அளவான ஓட்டத்தினைக் காவுகின்றன. 
ஒழுங்கமைப்பு C யில் பொது மையம் X இல் ஒன்றுக்கொன்று மிக அருகில் இரு தனித்தனியான தடங்கள் உள்ளன. எல்லா மூன்று ஒழுங்கமைப்புகளிலும் தடங்கள் ஒரே தூரம் XY யினால் வேறாக்கப்பட்டுள்ளன. P ஆனது XY யின் நடுப்புள்ளியாகும். A, B, C ஆகிய ஒழுங்கமைப்புகளிலே P யில் உள்ள காந்தப் பாய அடர்த்திகளின் பருமன்கள் முறையே BA, BB , BC எனின்?