A, B, C என்னும் மூன்று தனியாக்கிய கம்பிகளினூடாகச் சமமின்னோட்டங்கள் I பாய்கின்றன. 
கம்பி A ஆனது ஆரை R ஐ உடைய ஒரு வட்டத்தடமாகும். B,C ஆகியன முடிவின்றி நீண்ட நேர்க் கம்பிகளாகும், இவற்றின் பகுதிகள் உருவில் காணப்படுகின்றவாறு ஆரை R ஐ உடைய வட்டத் தடங்களை ஆக்குமாறு வளைக்கப்பட்டுள்ளன. BA, BB , BC ஆகியன உரிய தடங்களின் மையத்தில் உண்டாக்கப்படும் காந்தப் பாய அடர்த்திகளின் பருமன்களை வகை குறிக்குமெனின்?