சீர்க் குறுக்குவெட்டுப் பரப்புள்ள ஓர் அரைவட்டக் கடத்தி PQR உருவில் காணப்படுகின்றவாறு ஒரு கிடைச் சீர்க் காந்தப் புலத்தினுள்ளே நிலைக்குத்தாக வைக்கப்பட்டுள்ளது. 
அரை வட்டக் கடத்தியின் மையம் O வில் சுழலையிடப்பட்டுள்ள ஒரு கடத்துங்கோல் OA ஆனது O வினூடாகப் காந்தப் புலத்துக்குச் சமாந்தரமாகச் செல்கின்ற ஒரு கிடை அச்சைப் பற்றி ஒருமாறாக் கோணக் கதியுடன் சுழல்கின்றது. PQR உம் OA யும் ஒரே தடத்திறனுள்ள ஒரு திரவியத்தினால் ஆக்கப்பட் டுள்ளன. O,R ஆகிய இரு முனைகளுடனும் ஓர் அம்பியர்மானி தொடுக்கப்பட்டுள்ளது. முனை A ஆனது PQR ஐத் தொடுமெனின், நேரம் t உடன் OA யிற்குக் குறுக்கே தூண்டப்பட்ட மி.இ.வி. நு யினதும் அம்பியர்மானியினூடாகப் பாயும் மின்னோட்டம் I யினதும் மாறல்களை மிகச் சிறந்த முறையில் வகைக்குறிக்கும் வரைபுச் சோடி?