ஒரு சுனாமி எச்சரிக்கையின் போது ஒரு காற்று கடற்கரையிலிருந்து தரையை நோக்கி 60ms-¹ என்னும் ஒரு சீரான கதியில் வீசும் அதேவேளை ஒரு நிலையான சைரன் மீடிறன் 1600Hz ஐ உடைய ஒலி அலைகளைக் காலுகின்றது. சைரனின் ஒலியைக் கேட்கும் ஒருவர் கடற்கரையிலிருந்து தரையை நோக்கித் தனது காரை 30ms-¹ வீதத்தில் செலுத்துகின்றார். காற்று காரின் இயக்கத் திசையில் வீசுவதாகவும் அசையாத வளியில் ஒலியின் கதி 340ms-¹ ஆகவும் இருப்பின், சாரதி கேட்கும் சைரனின் ஒலியின் மீடிறன்?