ஒரு நீண்ட கிடையான இழையின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஒரு குறுக்குத் துடிப்பு நகருவதற்கு 0.1 s தேவைப்படுவதாக அவதானிக்கப்படுகிறது. இவ்விழை
யைக் கப்பி ஒன்றின் மேல் செலுத்தி 100 மடங்கு இழையின் திணிவைக் கொண்டுள்ள நிறையொன்றுக்கு இணைப்பதன் மூலம் இழையிலுள்ள இழுவை தொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்விழையின் நீளம் என்ன? (இழையினது நிலைக்குத்துத் துண்டின் நீளம் புறக்கணிக்கத்தக்கது என எடுத்துக் கொள்க.)