சமநீளங்கள் (l) ஐயும் சம குறுக்குவெட்டுப் பரப்பளவுகளையும் ஆனால் வெவ்வேறான அடர்த்திகளையும் (dA யும், dB யும்) உடைய இரு இழைகள் (Aயும் Bயும்) ஒருமிக்கத் தொடுக்கப்பட்டு, 
உருவிலே காணப்படுகின்றவாறு அச்சேர்த்தி இழை இரு நிலைத்த சுவர்களுக்கிடையே ஈர்க்கப்பட்டுள்ளது. t=0 இல் X,Y ஆகிய இரு முனைகளிலிருந்தும் A,B ஆகியவற்றின் வழியே ஒரே தடவையில் அனுப்பப்படும் இரு துடிப்புகள் இழையின் நடுப்புள்ளி O வினூடாக tA, tB என்னும் நேரங்களில் செல்லக் காணப்படுகின்றன. dA=4dB எனின்?