
அடர்த்தி ρ1ஐ உடைய திரவம் ஒன்றைக் கொண்ட பாத்திரம் ஒன்று உருவிற் காட்டப்பட்டுள்ளவாறு நிறுக்கும் தராசு ஒன்றின் மீது வைக்கப்பட்டு, இழை ஒன்றினாலே தொங்க விடப்பட்டுள்ள திணிவு m ஐயும் அடர்த்தி ρ2 ஐயும் உடைய உலோகத்துண்டு ஒன்று பாத்திரத்தின் பக்கங்களையோ,அடியையோ தொடாதவாறு திரவத்தில் அமிழ்த்தப்பட்டுள்ளது. இப்போது இழை வெட்டப்படுமெனின், தராசின் வாசிப்பில் ஏற்படும் மாற்றம்.