A என்னும் நிறுவனம் தனது வேலையாட்களை 250 இலிருந்து 200 ஆகக் குறைக்கிறது. இதன் விளைவாக அதன் வெளியீடானது நாளொன்றுக்கு 5 000 அலகுகளிலிருந்து 4 800 அலகுகளாக வீழ்ச்சியடைகிறது. B என்னும் நிறுவனம் தனது வேலையாட்களை 800 இலிருந்து 1 000 ஆக அதிகரிக்கிறது. இதன் விளைவாக நிறுவனத்தின் வெளியீடு நாளொன்றுக்கு 2 000 அலகுகளிலிருந்து 2 200 அலகுகளாக அதிகரிக்கிறது. இவ்விரு நிறுவனங்களிலுமுள்ள ஊழியர்களின் ஊழிய உற்பத்தித் திறனில் எத்தகைய மாற்றம் ஏற்படும்?