405, 406 ஆகிய வினாக்கள் பின்வரும் பந்தியை அடிப்படையாய்க் கொண்டவை. பந்தியைக்
கவனமாக வாசித்து,வினாக்களுக்கான விடைகளைத் தெரிந்தெடுக்க.
ஒளி சில உலோகப் பரப்புகளில் படும்போது அவற்றிலிருந்து இலத்திரன்கள் வெளியேற்றப்படலாம்.ஒளியில் உள்ள போட்டன்களினால் காவப்படும் சக்தி உலோகத்தில் உள்ள இலத்திரன்களுக்கு இடம் மாற்றப்படுகின்றது. ஓர் இலத்திரன் நேரேற்றம் பெற்ற கருவுடன் பிணைந்த அதன் கவர்ச்சி விசைகளை மேலாள்வதற்குப் போதிய சக்தியைப் பெறுமாயின், அது
பரப்பிலிருந்து ஓர் ஒளியிலத்திரனாகத் தப்பிச் செல்லலாம்.தப்பிச் செல்வதற்கு இலத்திரனிற்குத் தேவைப்படும் குறைந்தபட்சச் சக்தி ஓர் உலோகத்திலிருந்து வேறோர் உலோகத்திற்கு வேறுபடுகின்றது.
405.பேரியத்தின் பரப்பிலிருந்து ஒளியிலத்திரன்களை வெளியேற்றத் தேவைப்படும் சக்தி இலத்திரன்களின் மூலிற்கு 240 kJ ஆகும். பேரியத்தில் ஓர் ஒளியிலத்திரனை உண்டாக்கத்தக்க ஒளியின் குறைந்தபட்ச மீடீறன்?