அணுக் கட்டமைப்பைத் துணியும்போது இறக்கக் குழாய்களுடனான பரிசோதனையில் கண்டுபிடித்த நேர்க்கதிர் கள் பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது / எவை உண்மை யானது /உண்மையானவை?
(a) அவை கதோட்டுக் கதிர்களுடன் ஒருமிக்க இருக்கும் அதேவேளை துளைகளுடைய கதோட்டிற்குப் பின்னால் இருக்கும் பிரதேசத்தில் காணப்படும் துலக்கத்திற்குப் பொறுப்பாகும்.
(b) அவை அணுக்களிலிருந்து அல்லது மூலக்கூறுகளிலிருந்து இலத்திரன்கள் இழக்கப்படுவதனால் உண்டாகின்றன.
(c) அவை மீதி வாயுவில் தங்கியிராத திணிவுள்ள துணிக்கைகளைக் கொண்டுள்ளன.
(d) அவை மின் புலத்தினாலும் காந்தப் புலத்தினாலும் பாதிக்கப்படுவதில்லை.