சமநிலைத் தொகுதிகள் பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது / எவை உண்மையானது / உண்மையானவை?
(a) ஓர் இரசாயனத் தாக்கத்தின் சமநிலை மாறிலியின் அலகைச் சமன்படுத்திய இரசாயனச் சமன்பாட்டிலிருந்து உய்த்தறியலாம்.
(b) புறவெப்பத் தாக்கம், அகவெப்பத் தாக்கம் ஆகிய இரண்டினதும் சமநிலை மாறிலிகள் வெப்பநிலையுடன் மாறுகின்றன.
(c) திறந்த தொகுதிகளில் வாயு அவத்தை இரசாயனத் தாக்கம், திரவ அவத்தை இரசாயனத் தாக்கம் ஆகிய இரண்டும் சமநிலையை அடையலாம்.
(d) ஒரு சமநிலைத் தாக்கம் இரு அல்லது மேற்பட்ட சமநிலைத் தாக்கங்களின் கூட்டுத்தொகையாக எடுத்துரைக்கப்படுமெனின், ஒட்டுமொத்தத் தாக்கத்திற்கான சமநிலை மாறிலி தனித்தனித் தாக்கங்களின் சமநிலை மாறிலிகளின் கூட்டுத் தொகையினால் தரப்படும்.