ஒன்றோடொன்று கலக்கும் இரு தூய திரவங்களைக் கலந்து ஓர் இலட்சியக் கரைசல் தயாரிக்கப்பட்டது. மேற்குறித்தது தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது / எவை உண்மையானது / உண்மையானவை?
(a) கலக்கும்போது வெப்பவுள்ளுறை மாற்றம் பூச்சியமாகும்.
(b) மேற்குறித்த இலட்சியக் கரைசலிற்கு இரவோற்றின் விதியைப் பிரயோகிக்க முடியாது.
(c) கரைசலின் ஆவியமுக்கம் இரு திரவங்களினதும் தனித் தனிப் பகுதியமுக்கங்களின் கூட்டுத் தொகைக்குச் சமமாகும்.
(d) கரைசலின் ஆவியமுக்கம் கரைசலின் உள்ள ஒவ்வொரு திரவத்தினதும் மூல் பின்னத்துடன் நேர்கோட்டு (linearly) முறையில் மாறுகின்றது.