244,245 ஆகிய வினாக்கள் பின்வரும் பரிசோதனையை அடிப்படையாகக் கொண்டவை. ஒரு பதார்த்தம் S இன் வெவ்வேறு செறிவுகளின் ஒருதொடர் ஐதாக்கிய கரைசல்கள் நீரில் தயாரிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு கரைசலும் குளோரபோமுடன் நன்றாகக் குலுக்கப்பட்டு, சமநிலையை அடையவிடப்பட்டது. பதார்த்தம் S நீரிலும் பார்க்கக் குளோரபோமில் கூடுதலாகக் கரையத்தக்கது. அது நீரிலோ, குளோரபோமிலோ எந்த இரசாயனத் தாக்கத்திற்கும் உட்படுவதில்லை.
இரு அவத்தைகளுக்குமிடையே S இன் பங்கீட்டுக் குணகம் P உம் (p>1) உம் ஆகும். சமநிலைக்கு நீரவத்தை, குளோரபோம் அவத்தை ஆகியவற்றின் கனவளவுகள் முறையே Vaq, Vor ஆகவும் தொடக்கத்திலே (சமநிலைக்கு முன்னால்) நீரவத்தையிலும் சமநிலைக்குப் பின்னால் நீரவத்தையில் எஞ்சியும் இருந்த ளு இன் திணிவுகள் முறையே m, x ஆகவும் இருப்பின், பின்வரும் கோவைகளில் எது x ஐச் சரியாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றது?