சேர்வை A இன் CHCl3 இற்கும் நீருக்கும் இடையிலான பங்கீட்டுக் குணகம் 9 ஆகும். A ஆனது CHCl3 இல் கூடுதலாகக் கரையக் கூடியது. A இன் நீர்க்கரைசலொன்றின் 100 cm3 ஆனது A இன் 2.00 g ஐ ஆரம்பத்தில் கொண்டிருக்கின்றது. A இன் இக்கரைசல் CHCl3 இன் 100 cm3 இரு பங்குகளுடன் இருமுறை பிரித்தெடுக்கப்படும்போது CHCL3 இற்குள் A இன் முழுத் திணிவு எவ்வளவு பிரித்தெடுக்கப்பட்டிருக்கும்?