வினாக்கள் 209 இற்கும் 210 இற்கும் விடையளிப்பதற்குப் பின்வரும் பந்தியை உபயோகிக்க. A உம் B உம் இலட்சிய கரைசல்களைக் கொடுக்கும் இரு திரவங்களாகும். A இனதும் B இனதும் கரைசலொன்று அதனுடைய ஆவியுடன் சமநிலையிலுளள் பொழுது XA, XB ஆகியன திரவ அவத்தையிலுள்ள முறையே A இனதும் B இனதும் மூல் பின்னங்களாகும். YA, YB ஆகியன வாயு அவத்தையிலுள்ள முறையே யு இனதும் B இனதும் மூல் பின்னங்களாகும். தூய A இன் ஆவி அமுக்கம் PA Oஆனது தூய B இன் ஆவி அமுக்கம் PB O இலும் பார்க்கப் பெரியதாகும்.
A இனது 3a mol உம் B இனது 2a mol உம் ஒரு வெற்றிடமாக்கப்பட்ட பாத்திரத்தினுள் வைக்கப்பட்டு திரவ, ஆவி அவத்தைகளுக்கிடையில் ஒரு சமநிலை பெறப்படுகின்றது. மேற்தரப்பட்ட தொகுதிக்குப் பின்வருவனவற்றில் எது உண்மையானது?