MX, NX2 ஆகியன அயன் சேர்வைகளாகும். 300K இல் MX இனதும் NX2 இனதும் கரைதிறன் பெருக்கங்கள் முறையே 1×10-8mol2dm-6 உம் 4×10-12mol3dm-9 உம் ஆகும். இங்கே M ஆனது ஒருவலுவுள்ள உலோகம், N ஆனது இருவலுவுள்ள உலோகம். 300K இல் MX இன் நிரம்பிய கரைசல் (கரைசல் A) உம், NX2 இன் நிரம்பிய கரைசல் (கரைசல் B) உம் சம்பந்தமாக பின்வரும் கூற்றுகளில் எது / எவை உண்மையானது / உண்மையானவை?
(a) B கரைசலின் N 2+ இன் செறிவுக்கு A கரைசலின் M+ இன் செறிவு சமன்.
(b) B கரைசலின் X– இன் செறிவை விட A கரைசலின் X– இன் செறிவு இரு மடங்கு
(c) A கரைசலின் M– இன் செறிவை விட B கரைசலின் N2+ இன் செறிவின் இரு மடங்கு
(d) A கரைசலின் X– இன் செறிவை விட B கரைசலின் X– இன் செறிவு இரு மடங்கு