கூட்டம் IA மூலகங்களில் நைதரசன் வாயுவுடன் தாக்கம்புரிவது Li மாத்திரமேயாகும். ஒரு பரிசோதனையில் Li இன் 51 g ஆனது N2 இன் 39 g உடன் தாக்கம்புரிய விடப்படுகின்றது. பின்வரும் கூற்றுகளில் எது /எவை உண்மையானது / உண்மையானவை? (Li = 7, N = 14)
(a) Li முற்றாகத் தாக்கம்புரிந்து,சிறிதளவு N2 எஞ்சியிருக்கும்.
(b) N2 முற்றாகத் தாக்கம்புரிந்து, சிறிதளவு Li எஞ்சியிருக்கும்.
(c) Li உம் N2 உம் முற்றாகத் தாக்கம் புரிவதில்லை.
(d) அறிமுறையில், உண்டாகும் விளைபொருளின் அளவு 85 g ஆகும்.