கீழே தரப்பட்டுள்ள A, B, C, D, E ஆகிய ஒவ்வொரு பந்தியும் மூன்று வாக்கியங்களைக் கொண்டது. பொருளுள்ளவாறு ஒழுங்குமுறைப்படி வரிசைப்படுத்தக்கூடிய வாக்கியங்கள் அடங்கிய பந்தி அவற்றுள் எது?
A (a) ஒரு வருடத்தில் இரண்டு மழைக்காலங்கள் உள்ளன.
(b) ஒக்டோபர் தொடக்கம் டிசெம்பர் வரையிலான காலத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி கிடைப்பதோடு, மார்ச் தொடக்கம் மே வரையிலான காலத்தில் குறைந்தளவான மழை கிடைக்கின்றது.
(c) அதிக மழை வீழ்ச்சி கிடைக்கும் காலங்களில் நீர்நிலைகள், அணைகள் அனைத்திலும் நீர் நிரம்பியிருக்கும்.
B (a) டிசெம்பர் தொடக்கம் ஏப்ரல் வரையிலான ஒரு காலத்தில் மாத்திரம் பனை மரங்களில் பூக்கள் மலரும்.
(b) பெப்ரவரி தொடக்கம் யூன் வரையிலும், செப்ரெம்பர் தொடக்கம் நவம்பர் வரையிலுமான காலங்களிலும் ஆண்டில் இரண்டு தடவைகள் மரமுந்திரிகை மரங்களில் பூக்கள் மலரும்.
(c) தென்னை மரங்களில் ஆண்டு முழுவதும் பூக்கள் மலரும்.
C (a) ரோய், விளையாட்டில் கெட்டிகாரனாவதோடு பாடசாலையில் உள்ள அனைவரிடத்திலும்
பிரபல்யமானவனாவான்.
(b) ரம்யா பாடசாலையில் பேச்சிலும், நாடகத்திலும் கற்றல் நடவடிக்கைகளிலும் திறமையானவளாவாள்.
(c) அதிபரும் பாடசாலை ஒழுக்காற்று குழுவினரும் இணைந்து ரோய், ரம்யா ஆகிய இருவரையும் பாடசாலை மாணவத் தலைவர்களாக நியமிக்குமாறு விதந்துரைத்தனர்.
D (a) லக்ஷ்மி நீர்ப்பாத்திரமொன்றை ஏந்திச்சென்ற போது மயக்கமடைந்து கீழே விழுந்தாள்.
(b) லக்ஷ்மி இடையிடையே தலைவலியால் அவதியுறுபவள்.
(c) லக்ஷ்மி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டாள்.
E (a) வங்கிகள், தனி எண் குறியீட்டினால் காட்டப்படும் மட்டத்தில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தின் கீழ் வீட்டுக் கடன் வழங்குகின்றன.
(b) அரசானது வங்கிகளில் நிலையான வைப்புகளுக்கான மற்றும் சேமிப்பு வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை தனி எண் குறியீட்டு மட்டம் வரை குறைத்துள்ளது.
(c) வட்டி விகிதங்களை குறைப்பதன் நோக்கம், சகல பிரஜைகளுக்கும் வீட்டுக்கடன் வழங்கும் அரச கொள்கைக்கு ஆதரவளித்தலாகும்.