45, 46 ஆகிய வினாக்களில், 1, 7 ஆகிய வாக்கியங்களுக்கு இடையே உள்ள A, B, C, D,E ஆகிய வாக்கியங்கள் சரியான ஒழுங்கில் தரப்பட்டவில்லை. ஏழு வாக்கியங்களுக்கும் இடையே தருக்கரீதியான ஒழுங்குமுறையை உருவாக்கப் பொருத்தமான வரிசைப்படுத்தலைத் தெரிவுசெய்க.
1 – இலங்கை அரசு கோவிட் – 19 பொருளாதார மீளெழுச்சி வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக சில
உற்பத்திகள் மீது விதித்திருந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அண்மையில் நீக்கியது.
A – அத்தோடு இறக்குமதிகள் மீது தங்கியிருப்பதைத் தவிர்ப்பதற்காக சுதேச வழங்கல் சங்கிலிக்கு வலுவூட்டுவதற்கு அது துணையாக அமையும்.
B – ‘விவசாயம், சேவைகள் மற்றும் நிர்மாணங்கள் தொடர்பான வாகனங்கள் தவிர்ந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட மோட்டார் வாகன இறக்குமதியை நிறுத்துதல்” இது தொடர்பான வழிகாட்டல்களில் காட்டப்பட்டிருந்தது.
C – மோட்டார் வாகன இறக்குமதித் தடை மாற்றமின்றிக் காணப்பட்டது.
D – வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடி காரணமாக உற்பத்திகளின் இறக்குமதி மீது விதிக்கப்பட்ட தற்காலிகத் தடை முதல் தடவையாக இந்த வருடம் ஏப்ரல் மாதத்திலேயே செயலுருப்படுத்தப்பட்டது.
E – நாட்டுப் பொருளாதார மீளெழுச்சித் திட்டமானது செலாவணி விகிதத்தை உறுதிப்படுத்துவதனை இலக்காகக் கொண்டுள்ளது.
7 – பொருளாதார மீளெழுச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுதேச உற்பத்திகளுக்கு ஊக்கமளிப்பதற்காக சில பண்டங்கள் மீது விசேட வியாபார வரி உயர்மட்டங்களில் பேணிவரப்படும்.