CGT 2019-49

Author : Admin Astan

Topic updated on 04/21/2023 12:29pm

49, 50 ஆகிய வினாக்கள் பின்வரும் உரையாடல் பகுதியை அடிப்படையாகக் கொண்டவை.

இவ் உரையாடல் தனது மகனின் சான்றிதழ் பிரதியொன்றினைப் பெறுவதற்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு வந்த ஒரு பெண்ணிற்கும் விசாரணைக் கருமபீடத்தில் இருந்த வரவேற்பாளராகிய பெண் உத்தியோகத்தருக்கும் இடையே இடம்பெற்றது. பெண்மணியின் காலை வணக்கத்துடன் உரையாடல் ஆரம்பித்ததுடன் அவரது நன்றி தெரிவிப்புடன் அது முடிவடைந்தது. உரையாடலின் ஏனைய பகுதிகள் ஒன்றுடனொன்று கலந்திருப்பதுடன் A, B, C, D, E, F, G, H, I, J, K  ஆகிய எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளன.

♦ – காலை வணக்கம் மிஸ்!

A – சான்றிதழை இலங்கையிலா அல்லது வெளிநாட்டிலா பயன்படுத்த எதிர்பார்க்கின்றீர்கள்?
B – ஆம், வெளிநாடொன்றில் எனது மகன் வெளிநாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் பட்டப்படிப்பு பாடநெறியொன்றுக்காக விண்ணப்பிக்க எதிர்பார்க்கிறார். எனவே அது ஆங்கிலமொழியில் தேவைப்படுகின்றது.
C – ஆம், என்னிடம் இருக்கிறது. ஆனால் நான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மூலம் அதனை எப்படி உறுதி செய்துகொள்வது?
D – எமது திணைக்களம் சான்றிதழை நாளை காலையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பும். உங்களுக்கு அதனை நாளை பகல் 12.00 மணிக்குப் பின்னர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவினால் உறுதிப்படுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
E – சான்றிதழ் ஆங்கில மொழியில் உள்ளது. அதனை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.
F – நான் அதனை எவ்வாறு செய்துகொள்வது?
G – அது உங்களுடையதா?
H – இல்லை, அது எனது மகனுடையது.
I – வணக்கம் அம்மா. என்னிடம் என்ன உதவியை எதிர்பார்க்கின்றீர்கள்?
J – ஆமாம். உயர்தர சான்றிதழ் ஒன்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது என எனக்குத் தெளிவாக சொல்வீர்களா?
K – இதோ விண்ணப்பப் பத்திரம். இதனை சரியாகப் பூரணப்படுத்தி இந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள இல. 01 கருமபீடத்தில் ஒப்படையுங்கள். அங்கு இருக்கும் உத்தியோகத்தர் உங்களுக்கு உதவி செய்வார். உங்களிடம் பரீட்சை ஆண்டு, சுட்டிலக்கம் போன்ற தேவையான தகவல்கள் உள்ளனவா?

♦ – நல்லது. மிஸ், நீங்கள் முழு வேலையையும் நன்றாக விளக்கினீர்கள். மிக்க நன்றி.

இப்பெண்மணியினால் அவரது வாழ்த்து தெரிவிப்பு, நன்றி தெரிவிப்பு ஆகியவற்றுக்கு மேலாக மேற்கொள்ளப் பட்ட உரையாடற் பகுதிகள் யாவை?

 

RATE CONTENT
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply