CGT 2016-51

Author : Admin

Topic updated on 08/17/2017 04:24pm

ஒரு முடிபும், I, II, III என இலக்கமிடப்பட்ட மூன்று தகவல் தொகுதிகளும் தரப்பட்டுள்ளன.

  • அம்மூன்று தகவல் தொகுதிகளில் ஒன்றை மாத்திரம் பயன்படுத்தி முடிபைச்செய்யலாமெனின், A ஐத் தெரிந்தெடுக்க.
  • I, II ஆகியவற்றை ஒருமிக்கப் பயன்படுத்தி முடிபைச் செய்யலாமெனின், B ஐத் தெரிந்தெடுக்க
  • I, III ஆகியவற்றை ஒருமிக்கப் பயன்படுத்தி முடிபைச் செய்யலாமெனின், C ஐத் தெரிந்தெடுக்க.
  • II, III ஆகியவற்றை ஒருமிக்கப் பயன்படுத்தி முடிபைச் செய்யலாமெனின், D ஐத் தெரிந்தெடுக்க.
  •  I, II, III ஆகியவற்றை ஒருமிக்கப் பயன்படுத்தி முடிபைச் செய்யலாமெனின், E ஐத் தெரிந்தெடுக்க.

முடிவு : 2015 ஓகஸ்ற் க.பொ.த. (உ.த.) ப் பரீட்சையில் தொழினுட்பவியலுக்கான விஞ்ஞானத்திற்குத் (ST) தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை உயிர்முறைமைகள் தொழினுட்பவியலுக்குத் (BT) தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்கக் கூடியதாகும்.
I. பொறியியல் தொழினுட்பவியலுக்குத் (ET) தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியலுக்குத் (ICT) தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்கக் குறைந்ததாகும்.
II. BT இற்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை ET இற்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்கக் குறைந்ததாகும்.
III. ST இற்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை ET இற்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்கக் கூடியதாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply