ஒரு முடிபும், I, II, III என இலக்கமிடப்பட்ட மூன்று தகவல் தொகுதிகளும் தரப்பட்டுள்ளன.
முடிவு : தனியார் பேருந்துப் போக்குவரத்துச் சேவை அரச பேருந்துப் போக்குவரத்துச் சேவையைக் குறை நிரப்புகின்றது.
I. தனியார் பேருந்துச் சேவை இலாபமற்ற பேருந்துப் பாதைகளை உள்ளடக்கவில்லை.
II. அரச பேருந்துப் போக்குவரத்துச் சேவையில் கிடைக்கத்தக்க பேருந்துகளின் எண்ணிக்கை பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதியதன்று
III. அரசாங்கம் பேருந்துக் கட்டணங்கள், பேருந்து ஓட்ட நேரசூசிகள் என்பன தொடர்பாகத் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் அவ்வப்போது உடன்பாடுகளுக்கு வருகின்றது.