அரசாங்கம் 2011 – 2016 வரையிலான ஐந்து ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பின்வரும் பத்தாயிரமாம் ஆண்டு இலக்குகளை (MDG) அடைவதற்கான இலக்கைக் கொண்டுள்ளது.
(i) பட்டினியையும் கடும் வறுமையையும் ஒழித்தல்
(ii) எல்லோருக்கும் இடைநிலைக் கல்வி
(iii) குழந்தைகளின் போசணைக் குறைபாட்டு வீதத்தை 33% இலிருந்து 12 – 15% ஆகக் குறைத்தல்
(iv) ஆயுள் எதிர்வை 76 ஆண்டுகளிலிருந்து 80 ஆண்டுகளாக உயர்த்தல்
(v) நகரப் பிரதேசங்களில் தூய நீர் கிடைப்பதை 65% இலிருந்து 90% ஆக உயர்த்தல்
(vi) வன மூடுகையை 28% இலிருந்து 43% ஆக உயர்த்தல்
பின்வரும் கூற்றுகளில் எது மேற்குறித்த பந்தியில் வெளிப்படையாகக் கூறப்படவில்லை?