கீழே A தொடக்கம் கு வரைக்கும் 6 கூற்றுகள் தரப்பட்டுள்ளன. இக்கூற்றுகளில் மூன்றைக் காலவரன் வரிசையில் ஒழுங்குபடுத்தலாம். காலவரன் வரிசையில் மூன்று கூற்றுகளை வகைகுறிக்கும் எழுத்துகள் இடம்பெறும் விடையைத் தெரிவுசெய்க.
A – மத்திய மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையின் மாணவர்கள் விளையாட்டுகளிலும் கற்கைகளிலும் ஆர்வமிக்கவர்கள்.
B – வடமத்திய மாகாணத்தில் விலங்குகளையும் தாவரங்களையும் பார்த்துக் கற்பதற்கு ஆசிரியர்கள் ஒரு கற்கைச் சுற்றுலாவை ஒழுங்குசெய்தனர்.
C – பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளையும் பயிற்சியையும் வழங்கி ஆதரவளித்தனர்.
D – வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகளில் காட்டு யானைகள் அலைந்து திரிகின்றன.
E – ஒரு கிறிக்கெற்றுப் போட்டியில் மத்திய மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலை வடமத்திய மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையை எளிதாகத் தோற்கடித்தது.
F – மனித – யானை முரண்பாடுகள் காரணமாக இலங்கையில் பல இறப்புகள் சம்பவிக்கின்றன.