CGT 2013-37

Author : Admin

Topic updated on 08/11/2017 09:14am

G,H,I,J என்ற நான்கு பெண்களும் R, S, T, U என்ற நான்கு ஆண்களும் ஒரு செவ்வக மேசையைச் சுற்றி அமர்ந்திருத்தல் வேண்டும். அவர்களில் மூவர் மேசையின் ஒரு பக்கத்திலும் மூவர் மேசையின் மற்றைய பக்கத்திலும் ஒருவர் மேசையின் தலை அந்தத்திலும் ஒருவர் மேசையின் தலை அந்தத்திற்கு எதிரேயும் அமருதல் வேண்டும். பின்வரும் அமரும் ஒழுங்குகள் பற்றிய நிபந்தனைகள் பின்பற்றப்படுதல் வேண்டும்.

  • ஒரே பாலைச் (Sex) சேர்ந்தவர்கள் மேசையின் ஒரே பக்கத்தில் அடுத்தடுத்து அமருதலாகாது.
  • மேசையின் தலை அந்தத்தின் எதிர்ப் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் மேசையின் தலை அந்தத்தில் அமர்ந்திருப்பவரின் அதே பாலைச் சேர்ந்தவராக இருத்தலாகாது.
  • T ஆனவர் I யைப் போன்று மேசையின் அதே பக்கத்தில் அமருதலாகாது.
  • U ஆனவர் J யைப் போன்று மேசையின் அதே பக்கத்தில் அமருதலாகாது.

T மேசையின் தலை அந்தத்தின் எதிர்ப்பக்கத்திலும் U மேசையின் ஒரு பக்கத்தில் நடு ஆசனத்திலும் I மேசையின் மற்றைய பக்கத்தில் நடு ஆசனத்திலும் அமர்ந்திருந்தால், பின்வருவோரில் எவர் மேசையின் தலை அந்தத்தில் அமருதல் வேண்டும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply