A தொடக்கம் F வரையுள்ள ஆறு கூற்றுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் மூன்றைக் காலவரமுறைப்படி ஒழுங்குப்படுத்தலாம். மூன்று கூற்றுக்களையும் காலவரண்முறைப்படி காட்டும் எழுத்துகள் இடம்பெறும் விடையைத் தெரிந்தெடுக்க.
A – பிரதேசச் செயலகம் களனி ஆற்றின் சில இடங்களில் மணலை அள்ளுவதற்காக அனுமதிச்சீட்டுகளை வழங்குகின்றது.
B – மணலை அள்ளுபவர் ஒருவர் பூகொடை களனி ஆற்றுப்படுக்கையில் தங்கத் துகள்கள் இருப்பதைக் கண்டார்.
C – பிரதேசச் செயலகம் மணலை அள்ளுவதற்காக அனுமதிச்சீட்டுகள் வழங்குதலை நிறுத்தியது.
D – பிரதேசச் செயலகம் தங்கத் துகள்களை அகழ்வதற்கான அனுமதிச்சீட்டுகளை வழங்குவதன் மூலம் தங்கத் துகள்கள் அகழ்தலை ஒழுங்காக்கியது.
E – மணல் அள்ளுபவர்கள் இப்போது தங்கத் துகள்கள் அகழ்தலில் ஈடுபட்டுள்ளனர்.
F– ஆண்கள், பெண்கள், சிறார்கள் ஆகியோர் பூகொடை களனி ஆற்றுக்குச் சட்டவிரோதமாகத் தங்கத் துகள்கள் அகழ்வதற்குச் செல்கின்றனர்.